Published:Updated:

வேலை அவசரத்தில் காரிலேயே குழந்தையை விட்டுச் சென்ற தந்தை; குழந்தை பலி, தந்தை தற்கொலை - சோகப் பின்னணி!

ஆரோன் பெக் மற்றும் அவரது குழந்தை

அமெரிக்கா: ஆரோன் பெக் என்பவர் வேலை அவசரத்தில் தன் குழந்தையை காரிலேயே விட்டுச் சென்றுள்ளார். இதனால் தன் குழந்தையையும் இழந்து தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

வேலை அவசரத்தில் காரிலேயே குழந்தையை விட்டுச் சென்ற தந்தை; குழந்தை பலி, தந்தை தற்கொலை - சோகப் பின்னணி!

அமெரிக்கா: ஆரோன் பெக் என்பவர் வேலை அவசரத்தில் தன் குழந்தையை காரிலேயே விட்டுச் சென்றுள்ளார். இதனால் தன் குழந்தையையும் இழந்து தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Published:Updated:
ஆரோன் பெக் மற்றும் அவரது குழந்தை

இன்றைய காலத்தில் பலர் வேலைப் பளு, தொழில் மீதான கவனம் போன்ற காரணங்களால் தங்கள் குடும்பத்தை மறந்து, உடன் இருப்பவர்களையும் மறந்து மனஅழுத்தத்துடன் இருக்கிறார்கள். இப்படிச் சிந்திக்கக் கூட நேரமில்லாமல் அவசரமான வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏராளமான விஷயங்களை இழந்து வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆரோன் பெக் என்பவர் வேலை அவசரத்தில் தன் குழந்தையை காரிலேயே விட்டுச் சென்றுள்ளார். இதனால் அவர் தன் குழந்தையையும் இழந்து அவரும் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

37 வயதான ஆரோன் பெக், அமெரிக்காவின் தென்மேற்கில் அமைத்துள்ள வர்ஜீனியாப் பகுதியைச் சேர்ந்தவர். இவர் தினமும் வேலைக்குச் செல்லும்போது தனது 18 மாத குழந்தையான ஆண்டர்சனைப் பராமரிப்பு இல்லத்தில் (Daycare) விட்டுச் செல்வது வழக்கம். அந்த வகையில் கடந்த ஜூன் 28ம் தேதி தனது குழந்தையை அழைத்துக்கொண்டு வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது வேலை அவசரத்தில் காரின் பின்புற இருக்கையில் குழந்தை இருப்பதை மறந்து காரின் கதவை அடைத்து விட்டு அலுவலகம் சென்றுவிட்டார். இதனால் வெகுநேரம் காரின் உள்ளே இருந்த குழந்தை வெப்பம் தாங்காமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டது. மூன்று மணிநேரம் சென்றபின் ஓடிவந்து பார்த்த தந்தை அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றுள்ளார்.

கார் சீட்
கார் சீட்

இதற்கிடையே பராமரிப்பு இல்லத்திற்குக் குழந்தை வரவில்லை என்ற செய்தி அறிந்து ஆரோன் பெக்கின் குடும்பத்தினர் ஆரோன் பெக்கை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயன்றுள்ளனர். ஆனால் அவர் தொலைபேசியை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் இது குறித்து காவல்துறையினர் விசாரித்தபோது ஆரோன் பெக்கின் குழந்தை காரில் இறந்தது தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் குழந்தையின் இறப்பிற்குத் தனது கவனக்குறைவுதான் காரணம் என்று வருத்தப்பட ஆரோன் பெக், குற்ற உணர்ச்சியில் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆரோன் பெக் குடும்பம்
ஆரோன் பெக் குடும்பம்

இதனால் பெரும் துயரத்திற்குள்ளான குடும்பத்தினர், இரங்கல் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தனர். "18 மாத குழந்தையான ஆண்டர்சன் மற்றும் அவரது தந்தை ஆரோன் பெக் இருவரையும் இழந்தது மிகவும் வருத்தமாக உள்ளது. இது எங்கள் குடும்பத்தின் மிகப்பெரிய இழப்பு. ஆரோன் பெக், குடும்பத்தை நல்ல நிலைமைக்குக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக ஓயாமல் உழைத்தார். அதனால் அவரது வேலை மீது கவனமாக இருப்பார். அதே சமயம் அவர் குழந்தையின் மீது அளவுகடந்து அன்பு வைத்திருந்தவர், சுயநலமில்லாத தந்தையின் அன்பிற்குச் சான்றாக இருந்தவர். அவரது அன்பு மகத்தானது" என்று கூறியிருந்தனர்.