Published:Updated:

Dubai: 5 பில்லியன் பட்ஜெட்; ஆண்டுக்கு 1.8 பில்லியன் வருவாய்; உருவாகவிருக்கும் அசத்தல் ரெசார்ட்!

நிலவு வடிவில் ரெசார்ட்

பூமியிலேயே விண்வெளியில் இருப்பது போல் உணரும் அனுபவத்தைத் தரும் சுற்றுலாத்தலமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளனர்.

Dubai: 5 பில்லியன் பட்ஜெட்; ஆண்டுக்கு 1.8 பில்லியன் வருவாய்; உருவாகவிருக்கும் அசத்தல் ரெசார்ட்!

பூமியிலேயே விண்வெளியில் இருப்பது போல் உணரும் அனுபவத்தைத் தரும் சுற்றுலாத்தலமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளனர்.

Published:Updated:
நிலவு வடிவில் ரெசார்ட்

சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கும் துபாயில் நிலவு வடிவில் அல்ட்ரா சொகுசு ரெசார்ட் விரைவில் கட்டப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. துபாயில் உள்ள கனடா கட்டடக்கலை நிறுவனமான மூன் வேர்ல்ட் ரிசார்ட்ஸ் நிலவு வடிவில் அல்ட்ரா சொகுசு ரெசார்ட்டை கட்டவுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது. அதற்கான வடிவத்தை வடிவமைத்தும் உள்ளனர். சுமார் 735 அடி அளவில் 48 மாதங்களில் இது கட்டப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். பூமியிலேயே விண்வெளியில் இருப்பது போல் உணரும் அனுபவத்தைத் தரும் சுற்றுலாத்தலம் அறிமுகப்படுத்தப்பட உள்ளனர்.

`மூன் துபாய்' என்று குறிப்பிடப்படும் இந்தத் திட்டம் துபாயின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் என்று கட்டடக்கலை நிறுவனம் கூறியிருக்கிறது. அதாவது விருந்தோம்பல், பொழுதுபோக்கு இடங்கள், கல்வி, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் விண்வெளி சுற்றுலா போன்ற துறைகளில் `மூன் துபாய்' திட்டம் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது வெற்றிகரமான நவீன கால சுற்றுலா திட்டம் என்றும், இந்த பிராண்ட் விழிப்புணர்வு மூலம் துபாய்க்கான வருடாந்திர சுற்றுலா வருகைகள் இரட்டிப்பாகும் என்றும் மூன் வேர்ல்ட் ரிசார்ட்ஸின் நிறுவனர் சாண்ட்ரா ஜி மேத்யூஸ் கூறியிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த அல்ட்ரா சொகுசு `மூன் துபாய்' கட்டிடம் சுமார் 5 பில்லியன் பட்ஜெட் செலவில் தயாரிக்கப்படவுள்ளது. இதனால் வருடத்திற்கு 1.8 பில்லியன் வரை வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அந்த நிறுவனம் அங்கு ஸ்கை வில்லாஸ் என்ற பெயரில் குடியிருப்பு கட்டடங்கள் கட்டப்படவுள்ளது. சுமார் 144 வீடுகள் கட்டப்படும் என்றும் அதில் வீடு வாங்குபவர்களுக்கு மூன் ரெசார்ட் கிளப்க்கு தனிப்பட்ட உறுப்பினர் உரிமம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று உலகின் வட அமெரிக்கா, ஐரோப்பியா, மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் மூன் அல்ட்ரா சொகுசு ஹோட்டல் கொண்டுவரப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.