லியாம் மூர் என்ற ஐந்து வயது சிறுவன் கனடாவில் உள்ள செயின்ட் பால்ஸ் கத்தோலிக்க மழலையர் தொடக்கப் பள்ளியில் படித்து வருகிறார். உக்ரைனில் நடந்து வரும் போரின் காரணமாக உக்ரைன் மக்களும் குழந்தைகளும் பாதிப்பிற்குள்ளாவதை அறிந்த இந்தச் சிறுவன் தன் நண்பர்களுடன் சேர்ந்து உக்ரைனுக்காக நிதி திரட்டியுள்ளார். முதலில் தன்னிடம் இருந்த $20 டாலர் பணத்தை நிதியாக சேகரித்துள்ளார். பின்னர் அவனது அந்தச் செயலைப் பார்த்த சக நண்பர்கள் அவர்களிடம் இருந்த சிறுசிறு தொகைகளை நிதியளித்துள்ளனர்.

இதுபோல் லியாம் மூர், தன் பள்ளியில் படிக்கும் 6 மற்றும் 7ம் வகுப்பு மாணவர்களிடம் தன் நண்பர்களுடன் சேர்ந்து நிதி திரட்டியுள்ளார். இவ்வாறு $20 டாலர்கள் வரை சேமிக்கலாம் என திட்டமிட்டிருந்த அவர்களுக்கு இறுதியாக மொத்தம் $2,000 டாலர்கள் நிதியாக கிடைத்துள்ளது. சிறுவனின் $20 டாலர் என்ற சிறு தொகையிலிருந்து தொடங்கிய இந்த நிதி திரட்டு சுமார் $2,000 வரை சென்றுள்ளது. ஐந்து வயது சிறுவனின் இந்தச் செயலை அவரது பள்ளியில் உள்ள அனைவரும் பாராட்டியுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதுபற்றிக் கூறும் சிறுவனின் பெற்றோர், சிறுவயதிலிருந்தே லியாம் மூருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்து வந்ததாகவும் அவன் தானாக முன்வந்து இந்த நிதி திரட்டும் செயலை முன்னெடுத்ததாகவும் கூறியிருக்கின்றனர். மேலும் இந்த ஐந்து வயது சிறுவன் லியாம் மூர் பற்றிக் கூறிய அவரது பள்ளியில் பயிலும் அல்லிசன் கவுஸ்வெல் என்ற மாணவன், "ஒட்டுமொத்த மாணவர்களும் சேர்ந்து கைதட்டி லியாமின் செயலைப் பாராட்டியதாகவும், லியாம் மூரின் எண்ணத்தைப் புரிந்து கொண்டு அனைவரும் உதவினோம்" எனக் கூறினார்.