Published:Updated:

விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பாம்பு தலை; அதிர்ச்சியடைந்த பயணிகள் - வைரலான வீடியோ!

உணவில் துண்டிக்கப்பட்ட ஒரு பாம்பின் தலை ( ட்விட்டர் )

விமானத்தில் அளிக்கப்பட்ட உணவில் துண்டிக்கப்பட்ட ஒரு பாம்பின் தலை கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பாம்பு தலை; அதிர்ச்சியடைந்த பயணிகள் - வைரலான வீடியோ!

விமானத்தில் அளிக்கப்பட்ட உணவில் துண்டிக்கப்பட்ட ஒரு பாம்பின் தலை கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
உணவில் துண்டிக்கப்பட்ட ஒரு பாம்பின் தலை ( ட்விட்டர் )

சன் எக்ஸ்பிரஸ் என்பது துருக்கிய-ஜெர்மன் விமான நிறுவனம். துருக்கி நாட்டின் அன்காரா நகரிலிருந்து ஜெர்மனியின் டஸ்ஸல்டார்வ் நகரை நோக்கி, கடந்த 21-ம் தேதி சன் எக்ஸ்பிரஸ் நிறுவன விமானம் ஒன்று சென்றது. அப்போது விமானத்தில் இருக்கும் பயணிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இதில் ஒரு பயணிக்கு வழங்கப்பட்டிருந்த உணவில் பாம்பின் தலை இருந்திருக்கிறது. விமானக்குழுவின் உறுப்பினர் ஒருவர் பாம்பின் துண்டிக்கப்பட்ட தலை ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ட்விட்டரில் பகிரப்பட்ட வீடியோவில், ஒரு சிறிய பாம்பின் தலை உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகளுக்கு இடையில் இருப்பதைக் காண முடிகிறது.

இந்த நிலையில், இது குறித்து சன் எக்ஸ்பிரஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், ``விமானத்துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம்கொண்ட நாங்கள், எங்கள் விமானத்தில் விருந்தினர்களுக்கு தரமான வகையில் சேவைகளை வழங்கிவருகிறோம். எங்கள் விருந்தினர்களும், பணியாளர்களும் பாதுகாப்பான முறையில் இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். விமானத்தில் உணவு சேவை தொடர்பாக பத்திரிகைகளில் வரும் குற்றச்சாட்டுகள் மற்றும் பகிர்வுகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதை நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் இந்த விஷயத்தில் விரிவான விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், விசாரணை அறிக்கை வெளியாகும்வரை கேட்டரிங் சப்ளையருடனான ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!