Published:Updated:

Turkey: உணவில் பாம்பின் தலை; விமான ஊழியர் அதிர்ச்சி! நடந்தது என்ன?

உணவில் பாம்பின் தலை

விமானத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், அவருக்கு கொடுக்கப்பட்ட உணவில் பாம்பின் தலை இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Turkey: உணவில் பாம்பின் தலை; விமான ஊழியர் அதிர்ச்சி! நடந்தது என்ன?

விமானத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், அவருக்கு கொடுக்கப்பட்ட உணவில் பாம்பின் தலை இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Published:Updated:
உணவில் பாம்பின் தலை

துருக்கியில் சன் எக்ஸ்பிரஸ் என்ற விமான நிறுவனத்தில் பணிபுரியும்,விமான ஊழியர் ஒருவர் அவருக்குக் கொடுக்கப்பட்ட உணவில் பாம்பின் தலை இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். ஜூலை 21 அன்று துருக்கியில் உள்ள அங்காராவிலிருந்து (Ankara) ஜெர்மனியில் உள்ள டசல்டார்ஃப் (Dusseldorf) நகருக்குச் சென்ற சன் எக்ஸ்பிரஸ் விமானத்தில் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. விமான ஊழியர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகளுடன் சேர்ந்து பாம்பின் தலை உணவில் கலந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். உணவில் பாம்பின் தலை இருப்பதை வீடியோவாக எடுத்து அதை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். சன் எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் இந்தத் தகவலை அறிந்ததும் துருக்கி பத்திரிக்கையாளர்களிடம் ,இத்தகைய செயல்பாடுகளை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் கூறியிருக்கிறது.

அந்த விமான நிறுவனத்துக்கு உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தின் ஒப்பந்தத்தையும் நிறுத்தி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.மேலும், " 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறோம். எங்கள் விமானத்தில் பயணிப்பவர்களுக்கு நாங்கள் வழங்கும் சேவைகள் மிக உயர் தரம் வாய்ந்தவை. எங்கள் விருந்தினர்கள் மற்றும் பணியாளர்கள் இருவரும் வசதியான மற்றும் பாதுகாப்பான விமான அனுபவத்தைப் பெறுவதே எங்களுடைய நோக்கம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. உணவு வழங்கும் நிறுவனம் தங்கள் நிறுவனத்திலிருந்து வழங்கப்பட்ட உணவில் பாம்பின் தலை இருந்ததை மறுத்துள்ளது. எங்கள் நிறுவனத்தில் சமைக்கப்படும் உணவுகள் 280 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் சூடாக்கப்படுகின்றது. இந்த பாம்பின் தலை பாதி வெந்த நிலையில் இருப்பதன் மூலம், சமைத்த பின் வேறு யாரோ இதை செய்திருப்பார்கள்" என்று தெரிவித்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. சமீபத்தில் கூட சிக்கன் ஃப்ரையில் புகைக்கப்பட்ட சிகரெட் துண்டு இருந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!