Published:Updated:

அமெரிக்கா: `பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்துவேன்..!' - மிரட்டல்விடுத்த 5-ம் வகுப்பு மாணவன் கைது

துப்பாக்கிச்சூடு மிரட்டல் ( சித்திரிப்புப் படம் )

அமெரிக்காவில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் பள்ளிக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்துவேன் என மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலிருக்கும் தொடக்கப்பள்ளி ஒன்றில், 18 வயது இளைஞர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 19 சிறுவர்கள் உட்பட 21 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக இரங்கல் தெரிவித்த அமெரிக்க அதிபர் பைடன், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

ஜோ பைடன்
ஜோ பைடன்

இந்த நிலையில், பள்ளிச் சிறுவன் ஒருவன் துப்பாக்கிச்சூடு மிரட்டல் விடுத்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஃபுளோரிடா மாகாணத்தின் கேப் கரோல் நகரில் உள்ள பெட்ரிட் தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்துவரும் 10 வயது சிறுவன் ஒருவன், தனது பள்ளிக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்துவேன் என்று மெசேஜ் மூலம் மிரட்டல் விடுத்திருக்கிறான். இதைத் தொடர்ந்து போலீஸார் அந்தச் சிறுவனை கைதுசெய்து, விசாரணை நடத்திவருகின்றனர்.

இது தொடர்பாக, ``10 வயது சிறுவன் மற்றொரு மாணவனுக்கு பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தவிருப்பதாக மெசேஜ் மூலம் மிரட்டல் விடுத்திருக்கிறான். இதை நாம் வேடிக்கையாக எடுத்துக்கொள்ள முடியாது. உவால்டே துப்பாக்கிச்சூட்டுக்குப் பிறகு இந்த மாணவனின் மனநிலையில் வெறுப்புணர்வு இருப்பதாகத் தெரிகிறது. இந்தச் சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது" என்கிறார்கள் அந்தப் பகுதி காவல்துறையினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism