Published:Updated:

விலங்குகளைக் கொல்லாமல் இறைச்சி தயாரிப்பு! - சாதனை படைத்த சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம்

முதல் முறையாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இறைச்சி வளர்த்து சாதனை படைத்துள்ளது இஸ்ரேல் உணவு நிறுவனம்.

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம்
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் ( wikipedia )

இஸ்ரேலைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது அலெஃப் ஃபார்ம்ஸ் (Aleph Farms) என்ற உணவு தொழில்நுட்ப நிறுவனம். இது 3டி திசுக்களைப் பயன்படுத்தி மாட்டிறைச்சிகளை வளர்த்து வருகிறது. அதாவது, முதல்முறையாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இறைச்சியை வளர்த்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மாமிசம்
மாமிசம்

இறைச்சிக்காக எந்த உயிரினங்களும் கொலை செய்யப்படாமல் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாமல் இறைச்சிகளை வளர்க்கும் தங்களுடைய முயற்சியில் முதல்படியை எட்டியுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. அலெஃப் ஃபார்ம்ஸ் நிறுவனம் ரஷ்யாவின் பயோ பிரின்டிங் நிறுவனத்துடன் இணைந்து இப்பணியை மேற்கொண்டுள்ளது.

இறைச்சியை வளர்த்தது எப்படி?

ஆராய்ச்சியாளர்கள், பசுவிலிருந்து சில செல்களை எடுத்து அதற்குத் தேவையான ஊட்டச்சத்துகளைக் கொடுத்துள்ளனர். செல்கள் வளர ஏதுவான சூழலில் வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளன. இறுதியில் அவை முழுமையான மாமிச இறைச்சியாக வளரும் தன்மையைப் பெற்றுள்ளன.

Meat Grow
Meat Grow
Aleph Farms

மைக்ரோ ஈர்ப்பு நிலைகளின்கீழ், 3டி பயோ பிரின்டிங் சொல்யூசன்ஸ் மூலம் விண்வெளியில் இந்த இறைச்சி வளர்க்கப்பட்டுள்ளது. ``கற்பனை செய்து பார்க்க முடியாத சூழலில் இந்த அதிநவீன ஆராய்ச்சி மூலம், கழிவுகள் மற்றும் மாசுபாட்டை அதிகரிக்காத உணவு முறைகளின் வளர்ச்சி அத்தியாவசிய தேவையாகப் பார்க்கப்படுகிறது.

விண்வெளிப் பயணத்தின்போது வீரர்களுக்கு உணவளிக்க இந்த முறை நிச்சயம் உதவும். இதன்மூலம் புவியில் உள்ள உணவு பற்றாக்குறை அபாயத்தைப் போக்கவும், இறைச்சிக்காக விலங்குகள் கொல்லப்படுவதையும் தடுக்கவும் முடியும்” என அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

Meat Grow
Meat Grow
Aleph Farms

அலெஃப் ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் இந்த இறைச்சி தயாரிப்புகள் இன்னும் வணிகரீதியாக விற்பனைக்கு வரவில்லை. ஆனால் இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் இவை சந்தையில் விற்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

`பெண்களுக்கான முதல் விண்வெளி நடை!’ - தயாராகும் நாசா