Published:Updated:

டொனால்டு ட்ரம்ப்பின் மகள் இவான்காவிடம் 8 மணி நேர விசாரணை; என்ன நடந்தது?

Ivanka Trump ( AP Photo/Charlie Neibergall, File )

செனட் அரங்கத்தில் கூடிய ட்ரம்ப் ஆதரவாளர்கள், பைடனுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் மோதல் ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூட்டை நடத்த, கலவரத்தில் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

டொனால்டு ட்ரம்ப்பின் மகள் இவான்காவிடம் 8 மணி நேர விசாரணை; என்ன நடந்தது?

செனட் அரங்கத்தில் கூடிய ட்ரம்ப் ஆதரவாளர்கள், பைடனுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் மோதல் ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூட்டை நடத்த, கலவரத்தில் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

Published:Updated:
Ivanka Trump ( AP Photo/Charlie Neibergall, File )

2021-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டனர். அதில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் சான்று வழங்கும் விழா வாஷிங்டனில் உள்ள செனட் அரங்கத்தில் நடைபெற்றது. ட்ரம்ப், தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம்சாட்டி, தேர்தல் முடிவுகளை ஏற்கப் போவதில்லை என அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, 2021-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதியன்று செனட் அரங்கத்தில் கூடிய ட்ரம்ப் ஆதரவாளர்கள், பைடனுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி கலவரத்தில் ஈடுபட்டனர். செனட் அவைக்குள் நுழைய முற்பட்டனர்.

US President Donald Trump
US President Donald Trump
AP Photo/Evan Vucci

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதனால் ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் மோதல் ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சூட்டை நடத்தினர். கலவரத்தில் சில உயிரிழப்புகளும், பலருக்குக் காயமும் ஏற்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஜனவரி 6-ம் தேதி நடைபெற்ற இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க பிரதிநிதிகளிடம் விசாரிக்க யு.எஸ் ஹவுஸ் செலக்ட் கமிட்டி, (U.S House Select Committee) நியமிக்கப்பட்டது. இக்குழு முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் நெருங்கிய உறவினர்களை விசாரித்து வருகிறது.

ட்ரம்ப்பின் மகள் இவான்காவை செவ்வாய்க்கிழமை காலை தொடங்கி, மாலை 6 மணி வரை சுமார் எட்டு மணிநேரம் இக்குழு விசாரித்துள்ளது. குழுவின் பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் இவான்கா.

இவான்கா
இவான்கா

தாமாகவே விசாரணைக்கு வந்து, கேள்விகளுக்கு ஒத்துழைப்போடு இவான்கா பதில் அளித்ததாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் பென்னி தாம்சன் கூறி உள்ளார். இவான்காவின் கணவர் ஜாரெட் குஷ்னர் கடந்த வாரம் குழுவிடம் பதில் அளித்தார்.

ட்ரம்ப் ஆட்சியின்போது, இவான்கா ட்ரம்ப் மற்றும் அவரின் கணவர் இருவரும் வெள்ளை மாளிகையில் ஆலோசகர்களாகப் பணியாற்றினர். அவர்கள் ட்ரம்ப்புக்கு, தன் ஆதரவாளர்களை ஜனவரி 6 அன்று செனட் அரங்கத்துக்கு வரச்சொல்லி ஆலோசனை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism