Published:Updated:

உக்ரைனுக்குப் பதிலாக ஈராக் என உளறிய ஜார்ஜ் புஷ்; வைரல் வீடியோவும் நெட்டிசன்களின் கலாய் விமர்சனமும்!

ஜார்ஜ் புஷ்

"ஈராக் படையெடுப்பும்தான். சாரி எனக்கு 75 வயதாகிவிட்டது" என ஜார்ஜ் புஷ் முணுமுணுத்தது அரங்கில் இருப்பவர்களைச் சிரிக்க வைத்தது.

உக்ரைனுக்குப் பதிலாக ஈராக் என உளறிய ஜார்ஜ் புஷ்; வைரல் வீடியோவும் நெட்டிசன்களின் கலாய் விமர்சனமும்!

"ஈராக் படையெடுப்பும்தான். சாரி எனக்கு 75 வயதாகிவிட்டது" என ஜார்ஜ் புஷ் முணுமுணுத்தது அரங்கில் இருப்பவர்களைச் சிரிக்க வைத்தது.

Published:Updated:
ஜார்ஜ் புஷ்

சில நேரங்களில் தவறுதலாக பேசுவதும் சரியான அர்த்தத்தில் அமைந்து விடுவதுண்டு. அப்படி ஒரு நிகழ்வுதான் ஜார்ஜ் புஷ்க்கும் நிகழ்ந்திருக்கிறது. 'உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை கொடூரமானது, அநீதியானது' எனப் பேச வந்த ஜார்ஜ் புஷ், உக்ரைன் என்பதற்குப் பதிலாக ஈராக் என மாற்றி பேசிவிட்டார். 2003-ல் அமெரிக்க ஈராக் மீது படையெடுக்க உத்தரவிட்டவரே ஜார்ஜ் புஷ்தான். எனவே, நெட்டிசன்கள் இதனை முன்வைத்து `இப்போதாவது ஒத்துக்கொண்டாரே' என்கிற ரீதியில் விமர்சித்து வருகிறார்கள்.

தன்னுடைய ரெசிடென்ஷியல் மையத்தில் ஜார்ஜ் புஷ் பேசும் போது, "இதனுடைய விளைவு நாட்டின் பொருளாதார இருப்பை நீர்த்துப்போகச் செய்யும். ஒரு தனி மனிதனின் முடிவால் ஈராக் மீது நிகழ்த்தப்படும் படையெடுப்பு கொடூரமானது மற்றும் நியாயமற்றது" எனப் பேசிய புஷ் தவறான நாட்டின் பெயரைச் சொல்லியதை உணர்ந்து, "அதாவது உக்ரைன் மீது" என மாற்றினார். பார்வையாளர்கள் அமைதியாக இருக்கவும், "ஈராக் படையெடுப்பும்கூட. சாரி எனக்கு 75 வயதாகிவிட்டது" என அவர் முணுமுணுத்தது அரங்கில் இருப்பவர்களைச் சிரிக்க வைத்தது.

2003-ல் புஷ் அமெரிக்க அதிபராக இருந்த போது ஈராக் மீது நிகழ்த்தப்பட்ட அமெரிக்காவின் படையெடுப்பு நிகழ்ந்தது. ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதும் மக்கள் நாட்டை விட்டு இடம்பெயர்ந்ததும் நிகழ்ந்தன.

ரஷ்யாவின் ஆதிக்கத்தை எதிர்த்து வரும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை `21ம் நூற்றாண்டின் வின்சென்ட் சர்ச்சில்' எனவும் புகழ்ந்தார் ஜார்ஜ் புஷ்.

அவர் தவறுதலாக ஈராக் பெயரை உச்சரித்தாலும் `மனம் திறந்து பேசியுள்ளார் ஜார்ஜ் புஷ்' என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism