Published:Updated:

ஃபியோனா சூறாவளி முதல் கூந்தலைக் கொடியாக்கிய இரான் போராட்டம் வரை! - உலகச் செய்திகள் ரவுண்ட்அப்!

உலகச் செய்திகள் ரவுண்ட்அப்
Listicle
உலகச் செய்திகள் ரவுண்ட்அப்

ஃபியோனா சூறாவளி முதல் கூந்தலைக் கொடியாக்கிய இரான் போராட்டம் வரை! - உலகச் செய்திகள் ரவுண்ட்அப்!


ஃபியோனா சூறாவளி முதல் கூந்தலைக் கொடியாக்கிய இரான் போராட்டம் வரை! - உலகச் செய்திகள் ரவுண்ட்அப்!


1

பியுர்ட்டோ ரிகோ தீவை உலுக்கிய ஃபியோனா சூறாவளி

அமெரிக்காவின் பியுர்ட்டோ ரிகோ என்ற தீவில் ஃபியோன்னா சூறாவளியால் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் மின்சாரம் இல்லாமல் தவித்துவருகின்றனர். மணிக்கு 215 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இந்தச் சூறாவளி தற்போது கிழக்கு கனடாவை நோக்கி நகர்கிறது. இந்தச் சூறாவளியால் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2
( Francisco Seco )

தலைமுடியை வெட்டிக் கொடியாக மாற்றிய இரானியப் பெண்!

சரியாக ஹிஜாப் அணியவில்லை எனக் கூறி 22 வயது மாசா அமினி எனும் பெண் கொல்லப்பட்டதால் இரானில் கலவரம் வெடித்துள்ளது. நாட்டிலுள்ள கடுமையான ஹிஜாப் சட்டங்களை எதிர்த்து தங்களின் ஹிஜாபை எரித்தும், தலைமுடியை வெட்டியும் மக்கள் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றனர். ஒரு பெண் தலைமுடியை வெட்டி, கொடியாக மாற்றியுள்ள இந்தப் புகைப்படம் தற்போது உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.


3

பெல்ஜியத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி!

அத்தியாவசியத் தேவைகளான மின்சாரம் , எரிவாயு, உணவுப்பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாகச் சென்றுள்ளனர். விலை உயர்வுக்கு ஏற்ப ஊதியங்கள் உயர்த்தப்படாததால், வாழ்வாதாரம் சிக்கலாகியிருப்ப்தாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


4
( Antonio Calanni )

ரஷ்ய - உக்ரைன் போரால் நெருக்கடிக்கு உள்ளாகும் இத்தாலியின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!

இத்தாலியில் ரஷ்யாவுக்குச் சொந்தமான அந்நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டுவருகிறது . ரஷ்ய - உக்ரைன் போரால் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதியைத் தடைசெய்துள்ளது. இதனால் இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.


5

சைக்கிள் ஓட்டுவதை ஊக்கப்படுத்தும் முயற்சியில் பிரான்ஸ்!

மக்களிடையே சைக்கிள் ஓட்டும் விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் 250 மில்லியன் யூரோக்களை ஒதுக்க பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான கட்டமைப்பை மேம்படுத்துவதோடு, பள்ளிகளிலும் இது குறித்துப் பாடங்கள் கற்பிக்கப்படவுள்ளன.