Published:Updated:

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2 வது இடம்; அமேசான் நிறுவனரை பின்னுக்குத்தள்ளிய அதானி!

கவுதம் அதானி.

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்திலும்; அதானி தற்போது 2-வது இடத்திலும் உள்ளார்.

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2 வது இடம்; அமேசான் நிறுவனரை பின்னுக்குத்தள்ளிய அதானி!

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்திலும்; அதானி தற்போது 2-வது இடத்திலும் உள்ளார்.

Published:Updated:
கவுதம் அதானி.
மின்சாரம், துறைமுகம், விமான நிலையம், என்று பல்வேறு தொழில்களை நடத்துகிற இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் கௌதம் அதானி. இவர் கடந்த சில ஆண்டுகளாகவே உலகப் பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்துவருகிறார். உலகப் பணக்காரர் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த அதானி தற்போது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இதற்கு முன் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் முதல் இடத்திலும் , அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்தில் அதானியும் இருந்தனர். தற்போது ஃபோர்ப்ஸ் நிறுவன பணக்காரர் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்குத்தள்ளி அதானி குழுமத் தலைவரும், இந்தியருமான கெளதம் அதானி உலகின் இரண்டாவது பணக்காரராகியிருக்கிறார்.  இதற்கு காரணம் அதானி குழுமத்தின் பங்குகள் ஏற்றம். அதானி எண்டர்பிரைசஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி டோட்டல் கேஸ்,

கௌதம் அதானி
கௌதம் அதானி

அதானி பசுமை எனர்ஜி, அதானி துறைமுகங்கள், அதானி பவர் மற்றும் அதானி வில்மர் என 4.97 முதல் 3.45 சதவிகிதம் வரை அவரது நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்றம் வியாழன் அன்று நடந்தது. அதன் காரணமாக அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.40,000 கோடி உயர்ந்துள்ளது. இதனால் தற்போது அவர் ஃபோர்ப்ஸ் நிறுவன பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இந்தப் பட்டியலில் எலான் மஸ்க் சுமார் 273.5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்திலும், 154 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புகளுடன் அதானி இரண்டாவது இடத்திலும் உள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.