Published:Updated:

மாஸ்க் போடச் சொன்னதால் ஆத்திரம்; இளைஞரை சுட்டுக்கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை!

துப்பாக்கி

பீர் வாங்கிக்கொண்டிருந்த நபர் ஒருவர், தன்னிடம் மாஸ்க் போடச்சொன்ன பெட்ரோல் நிலைய காசாளரை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மாஸ்க் போடச் சொன்னதால் ஆத்திரம்; இளைஞரை சுட்டுக்கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை!

பீர் வாங்கிக்கொண்டிருந்த நபர் ஒருவர், தன்னிடம் மாஸ்க் போடச்சொன்ன பெட்ரோல் நிலைய காசாளரை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
துப்பாக்கி

2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், பல்வேறு மாற்றங்களடைந்து இன்னும்கூட  உலகநாடுகள் பலவற்றிலும் பரவிக்கொண்டுதான் இருக்கிறது. இதனைக்கட்டுப்படுத்தும் விதமாக கொரோனா தடுப்பூசி செலுத்துதல் மற்றும் பொதுவெளிகளில் கட்டாயமாக மாஸ்க் அணிதல் போன்ற கட்டுப்பாடுகள், இன்றும் பல நாடுகளில் நடைமுறையில் இருக்கின்றன. இந்த கட்டுப்பாடுகளை அமலில் வைத்திருக்கும் நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. இந்த நிலையில் அங்கு, பீர் வாங்கிக்கொண்டிருந்த நபர் ஒருவர், தன்னிடம் மாஸ்க் போடச்சொன்ன பெட்ரோல் நிலைய காசாளரை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மாஸ்க்
மாஸ்க்

இதில் குற்றம்சாட்டப்பட்டவர் 50 வயதான மரியோ என்று தெரியவந்திருக்கிறது. மேலும், சுட்டுக்கொல்லப்பட்டவராக அறியப்படும் 20 வயதான அலெக்ஸ், பகுதி நேரமாக வேலை செய்யும் மாணவர் என்று கூறப்படுகிறது. நேற்று நடந்த சம்பவத்தில் அலெக்ஸ், கடைக்கு வந்த அனைவரிடமும் மாஸ்க் போடும்படி கூறியிருக்கிறார். அப்போது கடைக்கு வந்த மரியோ, அலெக்ஸுடன் சிறிதுநேரம் வாக்குவாதம் செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். பின்னர் ஒன்றரை மணி நேரத்துக்குப் பின்னர் மரியோ மாஸ்க் போட்டுக்கொண்டு கடைக்கு வந்தார்.

துப்பாக்கி
துப்பாக்கி

ஆனால், மரியோ, 6 பெட்டி பீரை வாங்கும்போது மாஸ்க்கை கழட்டியிருக்கிறார். அப்போது அலெக்ஸ் மீண்டும் மாஸ்க் போடுங்கள் என்று கூற, எரிச்சலடைந்த மரியோ கோபத்தில் தன்னுடைய பையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அலெக்ஸை சுட்டுக்கொன்றார். அதோடு மரியோ, கொலைசெய்த அடுத்த நாளே போலீஸில் ஆஜரானார். அதைத் தொடர்ந்து இன்று இந்த வழக்கை விசாரித்த ஜெர்மனி நீதிமன்றம், கொலை மற்றும் சட்டவிரோதமாகத் துப்பாக்கி வைத்திருந்ததற்காக மரியாவைக் குற்றவாளி எனக் குறிப்பிட்டு அவருக்கு ஆயுள்தண்டனை விதித்து உத்தரவிட்டது.