Published:Updated:

உயிரிழக்கும் கடைசி நொடி; தங்கையின் சட்டையை இறுக்கிய கைகள்!- மனதை உலுக்கும் புகைப்படம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மனதை உலுக்கும் புகைப்படம்
மனதை உலுக்கும் புகைப்படம் ( SY24/ Bashar al-Sheikh )

சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் சிக்கி இதுவரை 37,000 பேர் உயிரிழந்துள்ளனர். பல மில்லியன் மக்கள் அகதிகளாக வேறு நாட்டுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சிரியாவில், அந்நாட்டு அரசு படைக்கும், கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே கடந்த 8 வருடங்களாக உள்நாட்டுப் போர் நடந்துவருகிறது. இதனால் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். போரின் நிலை மற்றும் தாக்குதலால் உயிரிழக்கும் குழந்தைகளின் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி சிரியாவின் நிலையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும். அப்படி ஒரு புகைப்படம் மீண்டும் வெளியாகியுள்ளது.

சிரியா போர்
சிரியா போர்
Twitter/@catt_ch

உயிரோட்டமான இந்தப் புகைப்படத்தை சிரியாவில் உள்ள சி.ஒய் 24 என்ற ஊடகத்தின் போட்டோகிராஃபர் பஷார் அல்-ஷேக் எடுத்துள்ளார். புகைப்படத்தின் காட்சிகள் காண்போர் மனதை நொறுக்கும் விதமாக உள்ளது. கிளர்ச்சியாளர்கள் ஆக்கிரமிப்பு பகுதியான வடமேற்கு சிரியாவின் இட்லிப் (Idlib) நகரில் ஏப்ரல் இறுதியிலிருந்து தொடர் வான்வெளித் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தத் தாக்குதலில் அப்பகுதியில் உள்ள ஒரு ஐந்து மாடி குடியிருப்பு இடிந்து விழுந்துள்ளது. அதில் வசித்து வந்த ஒரு குடும்பத்தின் தாய், தந்தை கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அவர்களின் இரண்டு மகள்கள் மட்டும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். கீழே விழும் நிலையில் இருக்கும் அந்தக் கட்டடத்தின் நுனியில் ஐந்து வயது சிறுமி ஒருவர் சிக்கியுள்ளார். அவர், கீழே விழும் நிலையில் உள்ள தன் தங்கையான ஆறு மாத குழந்தையின் சட்டையை மிகவும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டுள்ளார். இவர்களுக்கு மேலே ஒருவர் தலையில் அடித்தபடி கதறி அழுகிறார். இந்தச் சம்பவங்கள் அடங்கிய புகைப்படம்தான் வைரலாகி வருகிறது.

கட்டடத்தின் நுனியிலிருந்து 5 வயது சிறுமி ரிஹாம் அல்-அப்துல்லா இவர்தான் தன் தங்கையை உயிருடன் காப்பாற்றியது. ஆனால், தங்கையைக் காப்பாற்றிவிட்டு அந்தச் சிறுமி உயிரிழந்துள்ளார். ஆறு மாத குழந்தையான டௌகா, தலையில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ``குழந்தை சுவாசிக்க சிரமப்படுகிறார். அவருக்குச் செயற்கை சுவாசம் பொருத்தியுள்ளோம்” என மருத்துவர் இஸ்மாயில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தங்கையைக் காப்பாற்றிய சிறுமி ரிஹாமின் குடும்பத்தில் அவருடன் சேர்ந்து மொத்தம் எட்டு சிறுமிகள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. புகைப்படத்தில் உள்ள சிறுமிகளைத் தவிர மற்றவர்களின் நிலை தெரியவில்லை. எட்டு பேரில் ஒரு சிறுமி மட்டும், கடந்த வாரம் நடந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளார். தாக்குதல் நடந்த இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த தௌஃபிக் கட்டான் என்ற நபர், இடிபாடுகளிலிருந்து மக்களை வெளியேற்றி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் பணிகளைச் செய்துவருகிறார். அவர்தான் குழந்தை டௌகாவையும் காப்பாற்றியுள்ளார்.

தங்கையை காப்பாற்றிய சிறுமி
தங்கையை காப்பாற்றிய சிறுமி
Twitter/@javierbauluz

``நான் அந்த வழியாக வரும்போது குழந்தை மேலே தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். ஒரு சிறுமி அந்தக் குழந்தையை இறுக்கிப் பிடித்திருப்பதைப் பார்த்து அதிர்ந்தேன். பின்னர்தான் குழந்தையைக் காப்பாற்றினேன்” எனத் தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாக இட்லிப்பில் நடக்கும் தாக்குதலில் பல நூறு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு