நியூசிலாந்தில் உள்ள ஒரு தம்பதியினர் தங்கள் பண்ணையில் இருந்து கண்டெடுத்த உருளைக்கிழங்கை, கனமான உருளை கிழங்குக்கான கின்னஸ் உலக சாதனைக்காக அனுப்பிய நிலையில், பரிசோதனையில் அது உருளைக் கிழங்கு அல்ல என கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் அந்தத் தம்பதியினரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கொலின் கிரெய்க்-பிரவுன் மற்றும் அவரது மனைவி டோனா தங்கள் பண்ணையிலிருந்து ராட்சத உருளைக் கிழங்கு ஒன்றை கண்டெடுத்தனர். அதற்கு டப் என பெயரிட்டனர். பார்ப்பதற்கு பெரிதாக இருக்கும் இந்த ராட்சத உருளைக் கிழங்கு மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. அதனை எடை போட்டு பார்த்த போது சுமார் 7.8 கிலோகிராம் இருந்துள்ளது. 2011-ம் ஆண்டில் பிரிட்டனில் 5 கிலோவிற்கும் குறைவான எடை கொண்ட ஒரு உருளைக்கிழங்கு உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்காக கின்னஸில் இடம் பெற்றது.

ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு, கடந்த வாரம் கின்னஸ் உலக சாதனை அமைப்பிலிருந்து அவர்களுக்கு மின்னஞ்சல் வந்ததுள்ளது. அதில், துரதிர்ஷ்டவசமாக, இது உருளைக்கிழங்கு அல்ல எனவும் , உண்மையில் இது ஒரு குக்குர்பிடேசி (Cucurbitaceae) குடும்பத்தை சேர்ந்த மண்ணுக்கடியில் கிடைக்கும் காய் வகை எனவும் தெரிவித்துள்ளனர். இந்த காரணத்திற்காக, அவர்களின் விண்ணப்பம் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த தம்பதியினர் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.