Published:Updated:

ரஷ்யப் படைகளால் அச்சத்தில் உக்ரைன் பெற்றோர்... குழந்தைகளின் முதுகில் விவரங்களை எழுதும் சோகம்!

Russia - Ukraine war
News
Russia - Ukraine war

உக்ரைன் மக்கள் தங்கள் குழந்தைகளின் முதுகில் தங்கள் குடும்பம் தொடர்பான தகவல்களை எழுதி வருகின்றனர்.

Published:Updated:

ரஷ்யப் படைகளால் அச்சத்தில் உக்ரைன் பெற்றோர்... குழந்தைகளின் முதுகில் விவரங்களை எழுதும் சோகம்!

உக்ரைன் மக்கள் தங்கள் குழந்தைகளின் முதுகில் தங்கள் குடும்பம் தொடர்பான தகவல்களை எழுதி வருகின்றனர்.

Russia - Ukraine war
News
Russia - Ukraine war

ரஷ்யா உக்ரைனுக்கு எதிரான தனது போர்த் தாக்குதலை நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகிறது. ஆரம்பத்தில் ராணுவத்தினரை மட்டுமே குறிவைத்து தாக்கி வந்த ரஷ்யப் படைகள், தற்போது பொதுமக்களையும் கொன்று குவித்து வருவதாக உக்ரைன் அரசு குற்றம்சாட்டி வருகிறது. அதனால், உக்ரைன் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில், ஒரு குழந்தையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதலால் யாருடைய உயிருக்கும் உத்தரவாதமில்லை என்ற சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் மக்கள் தங்கள் குழந்தைகளின் முதுகில் தங்கள் குடும்பம் தொடர்பான தகவல்களை எழுதி வருகின்றனர். இது தொடர்பான புகைப்படம் ஒன்று இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளது.

குழந்தையின் முதுகில் அந்தக் குழந்தையின் பெயர், குடும்பம் தொடர்பான தகவல்கள் எழுதப்பட்டுள்ளன. இது தொடர்பாக உக்ரைன் பத்திரிகையாளர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``உக்ரைனின் தாய்மார்கள் தாங்கள் கொல்லப்பட்டுவிட்டால் தங்கள் குழந்தைகளையாவது காப்பாற்ற வேண்டும் என தங்கள் குழந்தைகளின் உடல்களில் குடும்பம் தொடர்பான தகவல்களை எழுதுகிறார்கள். ஆனால் ஐரோப்பா இன்னும் எரிவாயு பற்றி விவாதித்துக்கொண்டிருக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.