Published:Updated:

பாகிஸ்தான்: கராச்சி இந்துக் கோயிலில் தெய்வ சிலைகள் சேதம்... மர்ம நபர்களைத் தேடும் போலீஸ்!

கராச்சியில் இந்துக் கோயில் சேதம் ( ட்விட்டர் )

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள இந்துக் கோயிலில் தெய்வ சிலைகள் நேற்று அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பாகிஸ்தானின் கராச்சியை அடுத்த கோரங்கி பகுதியில் உள்ள ஸ்ரீ மாரி மாதா மந்திரில் தெய்வச் சிலைகள் புதன்கிழமை (நேற்று) மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டன. கோரங்கி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட "ஜே" பகுதியில் இந்தக் கோயில் அமைந்திருக்கிறது. இந்தச் சம்பவம் கராச்சியில் வசிக்கும் இந்து சமூகத்தினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பாகிஸ்தானில் போலீஸ்
பாகிஸ்தானில் போலீஸ்
ட்விட்டர்

இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய அந்தப் பகுதியில் வசிப்பவர்கள், ``ஆறு முதல் எட்டு மர்ம நபர்கள் மோட்டார் வாகனங்களில் அந்தப் பகுதிக்குள் வந்து கோயிலைத் தாக்கினர். யார், எதற்காக தாக்கினார்கள் என்பது பற்றி எங்களுக்குத் தெரியவில்லை. இது தொடர்பாக போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. சமீபகாலமாக பாகிஸ்தானில் உள்ள இந்துக் கோயில்கள் தொடர்ச்சியாக தாக்கப்பட்டு வருகின்றன" என்றனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். மேலும், போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகாரபூர்வ மதிப்பீட்டின்படி, பாகிஸ்தானில் 75 லட்சம் இந்துக்கள் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism