Published:Updated:

இந்தியா-பாகிஸ்தான் மேட்ச்: இங்கிலாந்தில் வெடித்த இந்து-முஸ்லிம் சர்ச்சை... பின்னணி இதுதான்!

இங்கிலாந்து: சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ள போலீசார்

அதைப் பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் இந்த நிகழ்வை விளையாட்டாகப் பார்த்து கடந்து விட்டு அடுத்த நாள் நம் வேலைகளைப் பார்க்கச் சென்றிருப்போம்.

இந்தியா-பாகிஸ்தான் மேட்ச்: இங்கிலாந்தில் வெடித்த இந்து-முஸ்லிம் சர்ச்சை... பின்னணி இதுதான்!

அதைப் பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் இந்த நிகழ்வை விளையாட்டாகப் பார்த்து கடந்து விட்டு அடுத்த நாள் நம் வேலைகளைப் பார்க்கச் சென்றிருப்போம்.

Published:Updated:
இங்கிலாந்து: சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ள போலீசார்
இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் என்றாலே எப்போதும் ஒரு பரபரப்பு இருந்துகொண்டுதான் இருக்கும். ஆனால், விளையாட்டை விளையாட்டாகப் பார்க்காமல் அதை அரசியலாகவும், மத வெறுப்புடனும் அணுகும்போது அது ஆபத்தாக மாறிவிடுகிறது.

இந்நிலையில், கடந்த மாதம் நடைபெற்ற 'ஆசியக் கோப்பை டி20' போட்டியில் ஆகஸ்ட் 28-ம் தேதி நடந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் இரண்டு பந்துகள் மீதமிருக்க பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதைப் பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் இந்த நிகழ்வை விளையாட்டாகப் பார்த்து கடந்து விட்டு அடுத்த நாள் நம் வேலைகளைப் பார்க்கச் சென்றிருப்போம். ஆனால் அந்த சமயத்தில் இங்கிலாந்து நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள லெய்செஸ்டர் என்ற நகரில் இரு கிரிக்கெட் ரசிகர்களுக்கிடையே நடந்த சிறிய மோதல் இன்று இங்கிலாந்தில் இந்து- முஸ்லிம் பிரச்னையாக உருமாறியுள்ளது.

இங்கிலாந்து: சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ள போலீசார்
இங்கிலாந்து: சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ள போலீசார்

இங்கிலாந்தில் லண்டனுக்கு அருகில் அமைந்துள்ள நகரம் இந்த லெய்செஸ்டர். இப்பகுதியில் இருக்கும் இந்தியர்கள் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டியில் இந்தியா வென்றதை விமர்சையாகக் கொண்டாடியுள்ளனர். அப்போது அங்கிருந்த இந்து- முஸ்லிம் தரப்பினரிடையே சிறிய மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இதில் இருதரப்பினரும் எதிர்தரப்பினரின் பொருள்களைச் சேதப்படுத்தினர். இந்நிலையில் இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவி, தற்போது இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் மோதலாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து அங்கு நிலவும் பதற்ற நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அப்பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து லெய்செஸ்டர் பகுதி போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எந்த வகையிலும் வன்முறை மற்றும் ஒழுங்கீன நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. கலவரம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவதைக் கவனித்தோம். இந்த வன்முறையில் அப்பகுதியில் உள்ள பல இடங்களில் சேதம் ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் மர்ம நபர் ஒருவர் மத அடையாளம் கொண்ட கொடியை சேதப்படுத்தம் வீடியோ வைரலாகி வருவதையும் கண்டோம். இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து அப்பகுதியில் இருக்கும் இரு சமூகத்தில் உள்ள முக்கிய நபர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம். பதற்றத்தைத் தணிக்க போலீஸ் அதிக அளவில் இந்தப் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். வன்முறையில் ஈடுபட்ட நபர் ஒருவர் மற்றும் ஆயுதம் வைத்திருந்த நபர் ஒருவர் என இரண்டு நபர்களை இதுவரை கைது செய்துள்ளோம். இந்த விவகாரத்தில் மக்கள் அமைதி காக்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

சாதாரண விளையாட்டை அரசியலாக மாற்றி வன்முறையில் ஈடுபட்டு வரும் இரு தரப்பினரையும் பலரும் கண்டித்து வருகின்றனர்.