Published:Updated:

ஹாங் காங்: எலிசபெத் ராணி முதல் டாம் குரூஸ் வரை பயணித்த ஜம்போ கப்பல் கடலில் மூழ்கியது! என்ன நடந்தது?

ஜம்போ கப்பல்

கொரோனாவால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கப்பல் உணவகத்தின் சேவை நிறுத்தப்பட்டது. நிதிச்சுமை ஏற்பட்டதால் கப்பல் சேவையை நிறுத்த அந்நிறுவன உரிமையாளர்கள் முடிவு செய்தனர்.

1976-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஜம்போ கப்பல் ஹாங் காங்கின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. இக்கப்பல் பார்ப்பதற்கு அரண்மனை போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும். பிரிட்டிஷ் ராணி எலிசபத் முதல் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் வரை பல பிரபலங்கள் இந்தக் கப்பல் உணவகத்திற்கு வருகை புரிந்துள்ளனர். ஸ்டீவன் சோடர்பெர்க் இயக்கிய 'Contagion' உட்பட பல படங்களில் இக்கப்பல் இடம்பெற்றுள்ளது.

ஜம்போ கப்பல்
ஜம்போ கப்பல்

கொரோனாவால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கப்பல் உணவகத்தின் சேவை நிறுத்தப்பட்டது. நிதிச்சுமை ஏற்பட்டதால் கப்பல் சேவையை நிறுத்த அந்நிறுவன உரிமையாளர்கள் முடிவு செய்தனர்.

இந்த நிலையில் தென் சீனக் கடலில் உள்ள ஷீஷா தீவில் சென்றுகொண்டிருந்த போது கப்பல் நீரில் மூழ்கிவிட்டதாக அதன் முதன்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. நீர் கப்பலினுள் நுழையத் தொடங்கியவுடன் கப்பலை மீட்க முயன்றும் முடியவில்லை என்றும் அந்நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. கப்பல் மூழ்கத் தொடங்கியவுடன் உள்ளே இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹாங்காங்கின் வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றான ஜம்போ கப்பலுக்கு மக்கள் பிரியாவிடைச் செய்திகளைப் பகிர்ந்துவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism