Published:Updated:

`கொரோனா நெகட்டிவ்; ஆனால் நுரையீரலில் தொற்று!’ - தொடர் சிகிச்சையில் பிரேசில் அதிபர்

பிரேசில் அதிபர்
பிரேசில் அதிபர்

பிரேசில் அதிபர் போசனாரோவுக்கு கொரோனா தொற்று குணமடைந்த பிறகு, நுரையீரலில் பாதிப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

உலகில் கொரோனா வெடித்தபோது பல நாட்டுத் தலைவர்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். அதற்காக மிக அதிகமாக விமர்சிக்கப்பட்டவர்களில் பிரேசில் அதிபரும் ஜெர் போல்சனாரோவும் ஒருவர். இவர் வெளியிடங்களுக்குச் செல்லும்போது மாஸ்க் அணிவதிலும் முழு ஊரடங்கு பிறப்பிப்பதிலும் நம்பிக்கையில்லாமல் இருந்தார். மேலும், கொரோனாவை சாதாரண காய்ச்சல்தான் எனத் தெரிவித்தார். இதற்கிடையில் கடந்த ஜூலை 7-ம் தேதி பிரேசில் அதிபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பிரேசில் அதிபர்
பிரேசில் அதிபர்

அதன்பிறகு பிரேசில் அதிபர் மாளிகையில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். அங்கு இருந்து தொடர்ந்து அலுவலக வேலைகளையும் போல்சனாரோ கவனித்து வந்தார். இவருக்கு கொரோனா பாசிட்டிவ்வுக்குப் பிறகு, 2 முறை சோதனை செய்தபோதும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து பாசிட்டிவ் என்றே முடிவுகள் வந்துள்ளன. இதனால் அதிபர் மன வேதனையிலிருந்ததாகக் கூறப்பட்டது. பின்னர் எடுக்கப்பட்ட 4-வது சோதனையில்தான் நெகட்டிவ் என முடிவுகள் வந்துள்ளன.

கொரோனா: மூன்று முறை பாசிட்டிவ்; இப்போது நெகட்டிவ்! - பிரேசில் அதிபரின் உற்சாக ட்வீட்

கடந்த 20 நாள்களுக்கும் மேலாகச் சிகிச்சை பெற்று வந்த அதிபரின் உடல் சற்று தேறி வந்த நிலையில் இவர் மனைவிக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அவரும் அதிபர் மாளிகையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மிச்செல் போல்சனாரோ நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக அதிபர் மாளிகையிலிருந்து வந்த செய்திகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்த பிறகும் தனக்கு நுரையீரல் தொடர்பான பிரச்னை இருப்பதாக அதிபர் போல்சனாரோ தெரிவித்துள்ளார்.

பிரேசில் அதிபர் போல்சனாரோ
பிரேசில் அதிபர் போல்சனாரோ

இது தொடர்பாகப் பேசியுள்ள அவர், `நேற்று நான் ஒருவித உடல் பலவீனத்தை உணர்ந்தேன். அதன் பின்னர் என்னைச் சோதித்த மருத்துவர்கள் ஒரு ரத்த பரிசோதனையை மேற்கொண்டனர். அதில் என் நுரையீரலில் ஒருவித தொற்றுநோய் இருப்பதைக் கண்டறிந்தனர். இப்போது நான் நுண்ணுயிர்களை அழிக்கும் மருந்தைப் பயன்படுத்தி வருகிறேன். 20 நாள் தனிமைப்படுத்துதலுக்குப் பிறகும் என் உடலில் வேறு பிரச்னைகள் உள்ளன” என்று பேசியுள்ளார்.

கொரோனா : `கடவுள் நினைத்தால் எல்லாம் மாறும்!’ - 3 வது முறையாக பிரேசில் அதிபருக்கு பாசிட்டிவ்
அடுத்த கட்டுரைக்கு