Published:Updated:

"நான் மர்மமான முறையில் உயிரிழந்தால்..." ரஷ்யாவின் மிரட்டலுக்கு பதிலளித்த எலான் மஸ்க்!

எலான் மஸ்க்

சமீப நாட்களாக எலான் மஸ்க் பதிவிடும் ட்வீட்கள் உலகம் முழுவதும் உற்று கவனிக்கப்பட்டு பேசுபொருளாகி வருகின்றன. இந்நிலையில் ரஷ்யாவிடமிருந்து தனக்கு மிரட்டல்கள் வருவதாக ட்வீட் செய்திருக்கிறார் எலான் மஸ்க். கடந்த பிப்ரவரி 24-ல் தொடங்கிய உக்ரைன்-ரஷ்யா போர் இன்று வரை நடந்து கொண்டிருக்கிறது. போரின் ஆரம்பக்காலங்களில் ரஷ்யப் படைகளால் உக்ரைன் நாட்டில் இணைய சேவை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. அப்போது உக்ரைன் நாட்டின் துணை பிரதமர் மைக்கைலோ பெடோரோவ் தங்கள் நாட்டுக்கு இணைய சேவை வழங்குமாறு டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்கிடம் ட்விட்டர் பதிவு மூலமாக கோரிக்கை விடுத்தார். அவர் கோரிக்கை விடுத்த 10 மணி நேரத்தில், எலான் மஸ்க் தனது ஸ்பேஸ்எக்ஸ் (Spacex) நிறுவனத்தின் `ஸ்டார்லைட் சாட்டிலைட்' மூலம் இணைய சேவையை வழங்கி உக்ரைனுக்கு உதவி செய்தார். அதைத்தொடர்ந்து `ஒற்றைப்போருக்குத் தயாரா!' என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு சவால் விடுத்தார். இதுபோன்று உக்ரைனுக்கு ஆதரவாக தெடர்ந்து சமூகவலைதளங்களில் குரல் கொடுத்து வந்தார் எலான் மஸ்க்.