Published:Updated:

``50 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படும்!" - ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

உக்ரைன் ராணுவம் ( AP )

``உக்ரைன் தலைநகரை ரஷ்யா கைப்பற்ற முயன்றால் 50 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படும்" என அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர், ரஷ்யாவுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

``50 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படும்!" - ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

``உக்ரைன் தலைநகரை ரஷ்யா கைப்பற்ற முயன்றால் 50 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படும்" என அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர், ரஷ்யாவுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

Published:Updated:
உக்ரைன் ராணுவம் ( AP )

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர்ச் சூழல், நாளுக்கு நாள் தீவிரமடைந்துகொண்டேவருகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எச்சரிக்கை விடுக்கும்விதமாக உக்ரைன் எல்லைப் பகுதியில் ராணுவத்தை நிறுத்தியுள்ளது ரஷ்யா. ரஷ்யாவின் இந்தச் செயலுக்கு, பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், அமெரிக்கா உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவைக் கடுமையாக எச்சரித்துவருகிறது.

ஐ.நா பாதுகாப்பு சபையில், ``ரஷ்யா உக்ரைன்மீது போர் தொடுத்தால் நிச்சயம் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும், மேலும் ரஷ்யாமீது பொருளாதாரத் தடை விதிக்கும் சூழலும் ஏற்படும்” என்று அமெரிக்கா கூறியிருந்தது. இதற்கு பதிலளிக்கும்விதமாக, அமெரிக்காவின் செயல்கள் எங்களை போர்ச் சூழலுக்குத் தள்ளுகின்றன என ரஷ்யா கூறியது.

ரஷ்யா - உக்ரைன்
ரஷ்யா - உக்ரைன்

இந்த நிலையில், ரஷ்யாவின் செயல்கள் குறித்துப் பேசிய அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், ``தற்போதுள்ள சூழலில் உக்ரைனை ரஷ்யா கைப்பற்றக்கூடும். அப்படி நிகழும் பட்சத்தில், அதிக அளவிலான மனித உயிரிழப்புகளும் ஏற்படும். ஆனால், எங்களின் படை மற்றும் பதிலடி மூலம், ரஷ்யாவுக்கும் அதிகப்படியான ராணுவ இழப்பு ஏற்படும் என்று நம்புகிறோம். ரஷ்யா, உக்ரைன் தலைநகரைக் கைப்பற்ற முயன்றால் 50 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படும்" என மீண்டும் எச்சரிக்கைவிடுக்கும் தொனியில் பேசியிருப்பதுது இந்த விவகாரத்தை மேலும் சூட்டைக் கிளப்பியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism