Published:Updated:

``நீங்கள் கூறுவது உண்மையெனில் படைகளை விலக்கிக்கொள்ளுங்கள்!"- ரஷ்யாவுக்கு உக்ரைன் கோரிக்கை

உக்ரைன் கொடி ( Twitter/@PromoteUkraine )

தங்கள் நாடு போர்தொடுக்க விரும்பவில்லை என ரஷ்யா கூறியதையடுத்து, `போர்தொடுக்க விரும்பவில்லையென்றால் எல்லையிலிருந்து படைகளை விலக்கிக்கொள்ளுங்கள்’ என ரஷ்யாவை உக்ரைன் வலியுறுத்தியுள்ளது.

ரஷ்யாவின் ஆதிக்கத்துக்கு எதிராகச் செயல்பட்டுவருவதாகச் சொல்லப்படும் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக, உக்ரைன் நாட்டு எல்லையில், ஆயுதங்களுடன்கூடிய ஒரு லட்சம் வீரர்கள்கொண்ட தனது ராணுவப்படையை ரஷ்யா நிறுத்தியுள்ளது. இதனால் உக்ரைன் எல்லையில் எப்போது வேண்டுமானாலும் போர் மூளும் நிலை உள்ளது. ரஷ்யாவின் இந்தச் செயலுக்கு அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் கடுமையான கண்டனங்களைப் பதிவுசெய்துவருகின்றன. இந்த நிலையில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் முன்னதாக, `தங்கள் நாடு உண்மையில் உக்ரைன்மீது போர்தொடுக்க விரும்பவில்லை’ எனக் கூறியுள்ளார். அதே சமயம், `மேற்கத்திய நாடுகள், உக்ரைன் எல்லையில் தங்களது படைகளைக் குவிக்கப்போவதில்லை என உறுதியளிக்க வேண்டும்’ என்று ரஷ்யா வலியுறுத்தியிருக்கிறது.

ரஷ்யா - உக்ரைன்
ரஷ்யா - உக்ரைன்

இந்த நிலையில், "ரஷ்யா உண்மையில் போர்தொடுக்க விரும்பவில்லையென்றால் எல்லையில் குவித்திருக்கும் படைகளை விலக்கிக்கொண்டு, அரசியல்ரீதியான பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும்" என்று உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கிடையே, இன்று நடைபெறும் ஐ.நா கூட்டத்தில், உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள படைகளைத் திரும்பப்பெற வேண்டுமென ரஷ்யாமீது அழுத்தம் கொடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!