Published:Updated:

ஆப்கானிஸ்தான்: பள்ளி மீது தொடர் வெடிகுண்டு தாக்குதல் - 20க்கும் மேற்பட்டோர் பலியான சோகம்

ஆப்கானிஸ்தான் - வெடிகுண்டு தாக்குதல்

ஆப்கானிஸ்தானில், காபூல் ஹசாரா பகுதியில் உள்ள பள்ளியில் நடந்த அடுத்தடுத்த வெடிகுண்டு தாக்குதலில், 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான்: பள்ளி மீது தொடர் வெடிகுண்டு தாக்குதல் - 20க்கும் மேற்பட்டோர் பலியான சோகம்

ஆப்கானிஸ்தானில், காபூல் ஹசாரா பகுதியில் உள்ள பள்ளியில் நடந்த அடுத்தடுத்த வெடிகுண்டு தாக்குதலில், 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.

Published:Updated:
ஆப்கானிஸ்தான் - வெடிகுண்டு தாக்குதல்

ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு காபூலில் உள்ள ஹசாரா பகுதியில், உயர்நிலைப் பள்ளிகள் மீது அடுத்தடுத்து நடந்த வெடிகுண்டு தாக்குதலில், மாணவர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தனியார் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட ஹசாரா பகுதியில் வசிப்பவர்கள், ஷியா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும் இச்சமூகத்தினர், சன்னி பயங்கரவாத குழுக்களால் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் இன மற்றும் மத சிறுபான்மையினர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

தாலிபன் அரசு
தாலிபன் அரசு

இந்த தாக்குதல் குறித்துப் பேசிய காபூல் தளபதியின் செய்தித் தொடர்பாளர் காலித் ஜட்ரான், இங்குள்ள உயர்நிலைப் பள்ளியின் மீது 3 வெடிகுண்டு தாக்குதல் நடந்திருப்பதாகவும், இதில் ஷியா சமூக மக்களுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஆப்கானிஸ்தானை கைப்பற்றி நாட்டை காப்பாற்றிவருவதாகத் தாலிபன்கள் கூறிவரும் நிலையில், ஆப்கானிஸ்தானில் மீண்டும் பயங்கரவாதம் எழும் அபாயம் இருப்பதாகச் சர்வதேச அதிகாரிகள் எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism