Published:Updated:

அமெரிக்கா: தந்தையைத் துப்பாக்கியால் சுட்ட 2 வயது சிறுவன்... என்ன நடந்தது?!

துப்பாக்கிச்சூடு ( சித்திரிப்புப் படம் )

அமெரிக்காவிலுள்ள ஃபுளோரிடா மாகாணத்தில், 2 வயது சிறுவன் ஒருவன் தன் தந்தையைத் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா: தந்தையைத் துப்பாக்கியால் சுட்ட 2 வயது சிறுவன்... என்ன நடந்தது?!

அமெரிக்காவிலுள்ள ஃபுளோரிடா மாகாணத்தில், 2 வயது சிறுவன் ஒருவன் தன் தந்தையைத் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
துப்பாக்கிச்சூடு ( சித்திரிப்புப் படம் )

அமெரிக்காவிலுள்ள ஃபுளோரிடா மாகாணத்தில், 2 வயது சிறுவன் ஒருவன் தன் தந்தையைத் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் கவனிக்காத நேரத்தில், எதிர்பாராதவிதமாக சிறுவன் தன் தந்தையைச் சுட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது, சிறுவன் உட்பட மூன்று குழந்தைகள், தாய், தந்தை என ஐந்து பேரும் ஒரே அறையிலேயே இருந்துள்ளனர்.

கடந்த மே மாதம் 26-ம் தேதி அன்று, அவசர அழைப்பு மூலம் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், வீட்டினுள் சிறுவனின் தந்தை சுடப்பட்டு வீழ்ந்து கிடப்பதைக் கண்டுள்ளனர். அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அங்கே சென்ற சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இந்தச் சம்பவத்தில், இறந்துபோன 26 வயதான அந்த நபர் முதலில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாகவே அதிகாரிகள் நம்பியுள்ளனர்.

அமெரிக்கா-தந்தையைச் சுட்டுக் கொன்ற 2 வயது சிறுவன்!
அமெரிக்கா-தந்தையைச் சுட்டுக் கொன்ற 2 வயது சிறுவன்!

ஆனால் பின்னர்தான் இந்த விசாரணையில், `தன்னுடைய 2 வயது சகோதரனால்தான், தன் தந்தை சுடப்பட்டார்' என அச்சிறுவனின் மூத்த சகோதரன், விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளான். மேலும் இந்த விவகாரத்தில், `அந்தச் சிறுவன், தன் தந்தை கணினியில் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்தபோது, தரையில் கிடந்த பையினுள் இருந்த துப்பாக்கியைக்கொண்டு விளையாட்டாக, தன் தந்தையின் முதுகில் சுட்டதாக' நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன. மேலும், சிறுவனின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் குழந்தை புறக்கணிப்பு மற்றும் போதைப்பொருள் பயன்பாடு போன்ற பல குற்றங்களில் பரோலிலிருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக ஏற்கெனவே 2021, ஆகஸ்ட்டில், 2 வயது குழந்தை தன் தாயின் தலையில் விளையாட்டாகச் சுட்ட சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism