Published:Updated:

அமெரிக்கா: ஓடும் சரக்கு ரயில்களில் கொள்ளை! - அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களின் சேவைகள் பாதிப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ்

ரயிலில் கொண்டு செல்லப்படும் சரக்குப் பெட்டிகளை எளிதில் உடைப்பதாகவும், பின்னர் அதிலுள்ள பார்சல்களை உடைத்து மலிவான, எளிதில் நகர்த்த முடியாத பொருள்களையெல்லாம் கொள்ளையடிப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

அமெரிக்கா: ஓடும் சரக்கு ரயில்களில் கொள்ளை! - அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களின் சேவைகள் பாதிப்பு

ரயிலில் கொண்டு செல்லப்படும் சரக்குப் பெட்டிகளை எளிதில் உடைப்பதாகவும், பின்னர் அதிலுள்ள பார்சல்களை உடைத்து மலிவான, எளிதில் நகர்த்த முடியாத பொருள்களையெல்லாம் கொள்ளையடிப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

Published:Updated:
லாஸ் ஏஞ்சல்ஸ்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் ரயில் நிலையத்தில் நாள்தோறும், திருடர்களால் ரயில்களின் சரக்கு பெட்டிகள் உடைக்கப்பட்டு டன் கணக்கில் பொருள்கள் கொள்ளையடிக்கப்படுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது போன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் ரயிலில் கொண்டு செல்லப்படும் சரக்குப் பெட்டிகளை எளிதில் உடைப்பதாகவும், பின்னர் அதிலுள்ள பார்சல்களை உடைத்து மலிவான, எளிதில் நகர்த்த முடியாத பொருள்களையெல்லாம் கொள்ளையடிப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். இதன் மூலம் அமேசான், டார்கெட் போன்ற கூரியர் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் முக்கியமாக வாடிக்கையாளர்கள் தாங்கள் ஆர்டர் செய்த பொருள்களைப் பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் ரயில் நிலையம்
லாஸ் ஏஞ்சல்ஸ் ரயில் நிலையம்

இதுகுறித்து யூனியன் பசிபிக் ரயில் இயக்குநரகம் தங்கள் ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில், 2020 அக்டோபர் திருட்டு சம்பவங்களை 2021 அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 356% அதிகரித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும் இது போன்ற சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் பணிகளை மேம்படுத்தும் விதமாக ட்ரோன் கண்காணிப்பு மற்றும் கூடுதல் பாதுகாப்புப் பணியாளர்களை நியமித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. 2021-ம் ஆண்டில் மட்டும் இது போன்ற திருட்டுகளால் ஏற்பட்ட சேதங்கள் சுமார் 5 மில்லியன் இருக்கும் என ஆப்ரேட்டர்கள் மதிப்பிட்டுள்ளனர். இதனால் யூனியன் பசிபிக் மற்றும் லாஸ் ஏஞ்செல்ஸின் மொத்த விநியோக சங்கிலியும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சம்பவ இடத்தில் கிடக்கும் காலி பார்சல் பெட்டிகளின் வீடியோ ஒன்று ட்விட்டரில் வெளியாகி தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism