Published:Updated:

ஸ்பெயின்: மதிப்பெண் குறைவாக எடுத்ததால் கண்டிப்பு; ஆத்திரத்தில் தாய் உட்பட மூவரைக் கொலை செய்த சிறுவன்

சிறுவன் கொலை குற்றத்தில் கைது

ஸ்பெயினில் 15 வயது சிறுவன், பள்ளியில் குறைவாக மதிப்பெண் வாங்கியதற்காகக் கண்டித்த தாய் உட்பட மூன்று பேரை சுட்டுக்கொன்றார்.

ஸ்பெயின்: மதிப்பெண் குறைவாக எடுத்ததால் கண்டிப்பு; ஆத்திரத்தில் தாய் உட்பட மூவரைக் கொலை செய்த சிறுவன்

ஸ்பெயினில் 15 வயது சிறுவன், பள்ளியில் குறைவாக மதிப்பெண் வாங்கியதற்காகக் கண்டித்த தாய் உட்பட மூன்று பேரை சுட்டுக்கொன்றார்.

Published:Updated:
சிறுவன் கொலை குற்றத்தில் கைது

ஸ்பெயினில் தென்கிழக்கு துறைமுக நகரான அலிகாண்டேவிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓர் கிராமத்தில், 15 வயது சிறுவன், தாய், தந்தை மற்றும் தன் 10 வயது சகோதரன் ஆகிய மூன்று பேரையும் சுட்டுக்கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மாலை, இந்தச் சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படுகிறத்து. கடந்த வெள்ளிக்கிழமை இரவு அந்தச் சிறுவன் தன் குடும்பத்தினரைக் கொலை செய்துவிட்டு, உறவினர்களிடம் சென்று அவர்களை யாரோ சுட்டுக்கொன்று விட்டார்கள் என்று கூறியிருக்கிறார்.

 15 வயது சிறுவன் கைது
15 வயது சிறுவன் கைது

அதை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உடனடியாக இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணையை தொடங்கினர். அப்போது, சிறுவன் மூன்று நாள்களாக இறந்தவர்களின் சடலங்களுடன் வீட்டில் இருந்தது தெரியவந்தது. அதையடுத்து, சந்தேகத்தின் பேரில் சிறுவனை கைது செய்து விசாரித்தனர். அப்போது சிறுவன், ``பள்ளித் தேர்வில் மதிப்பெண் குறைவாகப் பெற்றதால் அம்மா கண்டித்தார். அதனால், ஆத்திரத்தில் வேட்டைக்குப் பயன்படுத்தும் துப்பாக்கியை எடுத்து என்னுடைய அம்மாவை சுட்டுக்கொன்றேன். அதையறிந்த அப்பாவும், சகோதரனும் வந்தார்கள். அதனால், அவர்களையும் சுட்டுக் கொன்றுவிட்டேன்" என்று கூறியிருக்கிறார்.

அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், அந்தச் சிறுவனை கைது செய்து கூர்நோக்கு பள்ளியில் அடைத்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism