Published:Updated:

திருமணம் மீறிய உறவு; கணவரின் 1 கோடி ரூபாய் லாட்டரி பணத்துடன் மாயமான மனைவி! - கைவிரித்த போலீஸ்

லாட்டரி பணம் ( சித்திரிப்புப் படம் )

``ரூ.1.3 கோடியில் பாதியைக் கோயிலுக்கு நன்கொடையாக அளித்துவிட்டு மீதியைக் குடும்ப உறுப்பினர்களிடையே பகிர்ந்துகொள்ளத் திட்டமிட்டிருந்தேன்." - மானிட்

திருமணம் மீறிய உறவு; கணவரின் 1 கோடி ரூபாய் லாட்டரி பணத்துடன் மாயமான மனைவி! - கைவிரித்த போலீஸ்

``ரூ.1.3 கோடியில் பாதியைக் கோயிலுக்கு நன்கொடையாக அளித்துவிட்டு மீதியைக் குடும்ப உறுப்பினர்களிடையே பகிர்ந்துகொள்ளத் திட்டமிட்டிருந்தேன்." - மானிட்

Published:Updated:
லாட்டரி பணம் ( சித்திரிப்புப் படம் )

தாய்லாந்து நாட்டில் கணவன் லாட்டரியில் வென்ற ரூ.1.3 கோடியை, மனைவி மொத்தமாக எடுத்துக்கொண்டு திருமணம் மீறிய உறவு காரணமாக வேறொருவருடன் மாயமான சம்பவம் நடந்திருக்கிறது. முன்னதாக மானிட் (Manit) என்பவர், ஒரு லாட்டரியில் 6 மில்லியன் பாட் அதாவது இந்திய மதிப்பில் ரூ.1.3 கோடி வென்றிருக்கிறார். பின்னர் இவ்வளவு பணத்தை என்ன செய்யலாம் என யோசித்த மானிட், ரூ.1.3 கோடியில் பாதியைக் கோயிலுக்கு நன்கொடையாக அளித்துவிட்டு மீதியை குடும்ப உறுப்பினர்களிடையே பகிர்ந்துகொள்ள திட்டமிட்டிருந்திருக்கிறார். அதற்காக மானிட் தனி விழா ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார்.

லாட்டரி
லாட்டரி
கோப்புப் படம்

அந்த விழாவில் தன் மனைவியிடம் இளைஞர் ஒருவர் பேசிக்கொண்டிருப்பதை மானிட் பார்த்திருக்கிறார். மானிட் அந்த நபரைப் பற்றி மனைவியிடம், `யார் அவர்?' என்று கேட்டிருக்கிறார். மனைவியும் தன்னுடைய உறவினர் என்று கூறியிருக்கிறார். ஆனால், சிறிது நேரத்தில் அவர் மனைவி லாட்டரி பணம் மொத்தத்தையும் எடுத்துக்கொண்டு, தன்னுடைய உறவினர் என்று கூறிய நபருடன் அங்கிருந்து மாயமாகிவிட்டார். இதில் அதிர்ச்சியடைந்த மானிட் உடனடியாக போலீஸிடம் சென்று இது பற்றி விவரித்திருக்கிறார். ஆனாலும் போலீஸார் இதற்கு உதவ முடியாது எனத் தெரிவித்திருக்கின்றனர். காரணம், மானிட்டுக்கு திருமணமாகி 26 ஆண்டுகளாகியும், மூன்று குழந்தைகள் பெற்ற பின்பும், இதுவரை திருமணம் செய்துகொண்டதற்கான முறையான சான்றிதழ்கள் எதிலும் தம்பதி கையெழுத்திடவில்லை எனக் கூறப்படுகிறது.

லாட்டரி பணம்
லாட்டரி பணம்

மானிட், தன்னுடைய மனைவி பணத்தை எடுத்துக்கொண்டு மாயமாவதற்கு முன்னர் வரை தங்களின் உறவில் எந்தவொரு பிரச்னையும் ஏற்படவில்லை என்று கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து போலீஸாரும், `மானிட் இந்தப் பணத்தை பரிசாகக் கொடுத்ததாகத்தான் தெரிகிறது. அவரால் தன்னுடைய பணத்தை திருப்பித்தருமாறு அவருடைய மனைவியை வற்புறுத்த முடியுமே தவிர, சட்டரீதியாக பணத்தைப் பெற முடியாது' எனத் தெரிவித்துவிட்டனர். இருப்பினும் தற்போது மானிட்டின் மனைவி எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. இதன் காரணமாக, மானிட் தற்போது தன்னுடைய மனைவியை எப்படியாவது தொடர்புகொள்ள வேண்டும் என்பதற்காக உள்ளூர் ஊடகங்கள் பக்கம் திரும்பியிருக்கிறார்.