Published:Updated:

``சாரி, சாப்பாடு டேஸ்டியா இருக்கு!" - கஸ்டமர் உணவைச் சாப்பிட்டுவிட்டு மெசேஜ் அனுப்பிய டெலிவரி பாய்

ஆன்லைன் ஃபுட் டெலிவரி ( twitter )

இங்கிலாந்தில் ஃபுட் டெலிவரி மேன் ஒருவர், கஸ்டமர் ஆர்டர் செய்த உணவைச் சாப்பிட்டுவிட்டு, கஸ்டமருக்கே அந்த உணவு குறித்து மெசேஜ் அனுப்பிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

``சாரி, சாப்பாடு டேஸ்டியா இருக்கு!" - கஸ்டமர் உணவைச் சாப்பிட்டுவிட்டு மெசேஜ் அனுப்பிய டெலிவரி பாய்

இங்கிலாந்தில் ஃபுட் டெலிவரி மேன் ஒருவர், கஸ்டமர் ஆர்டர் செய்த உணவைச் சாப்பிட்டுவிட்டு, கஸ்டமருக்கே அந்த உணவு குறித்து மெசேஜ் அனுப்பிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Published:Updated:
ஆன்லைன் ஃபுட் டெலிவரி ( twitter )

ஃபாஸ்ட் ஃபுட் யுகத்தில் சுழன்றுகொண்டிருக்கும் இந்த உலகில், நீங்கள் சமைக்கவில்லையென்றாலும் பரவாயில்லை அல்லது நீங்கள் சமைக்கவே வேண்டாம் என்று கூறி, மக்கள் இருக்குமிடத்துக்கே சாப்பாட்டைக் கொண்டுவந்து சேர்க்கின்றன இந்த ஆன்லைன் ஃபுட் டெலிவரி நிறுவனங்கள். கிட்டத்தட்ட அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் முதல் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் வரை, ஆன்லைன் ஃபுட் டெலிவரி நிறுவனங்கள் பெருகிவிட்டன. மக்களும் ருசிகண்ட பூனையைப்போல, பல நேரங்களில் ஆன்லைனிலேயே சாப்பாட்டை ஆர்டர் செய்து சாப்பிடுகிறார்கள்.

டெலிவரி வாகனங்கள் (Representational Image)
டெலிவரி வாகனங்கள் (Representational Image)

இதில் இருக்குமிடத்திலிருந்து நகராமலிருக்கும் மக்களுக்கும், ஃபுட் டெலிவரி நிறுவனங்களுக்கும் இடையில் நிற்காமல் ஓடிக்கொண்டிருப்பார்கள்தான் இந்தச் சாப்பாட்டை டெலிவரி செய்பவர்கள். இவர்கள், பெரும்பாலான நேரங்களில் எவ்வளவு காஸ்ட்லியான ஹோட்டல்களிலிருந்து ஆர்டர் செய்த சாப்பாடாக இருந்தாலும் சரி, எப்படிப்பட்ட டேஸ்ட்டியான சாப்பாடாக இருந்தாலும் சரி.. அதை அப்படியே டெலிவரி செய்துவிடுவார்கள். இப்படியிருக்க, இங்கிலாந்தில் ஃபுட் டெலிவரி பாய் ஒருவர், கஸ்டமர் ஆர்டர் செய்த சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு, கஸ்டமருக்கே அந்தச் சாப்பாட்டைப் பற்றி மெசேஜ் அனுப்பிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

ஆன்லைன்  ஃபுட் டெலிவரி
ஆன்லைன் ஃபுட் டெலிவரி
twitter

அந்த கஸ்டமருக்கும், டெலிவரி பாய்க்கும் இடையேயான மெசேஜின் ஸ்கிரீன் ஷாட்டை, நெட்டிசன் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அதில், டெலிவரி மேன் முதலில் `Sorry' என கஸ்டமருக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார். அதற்கு கஸ்டமர், `என்ன ஆச்சு' என்று கேட்க, `இந்தச் சாப்பாடு ரொம்ப டேஸ்டியா இருக்கு. நான் இதைச் சாப்பிட்டுவிட்டேன். டெலிவரி நிறுவனத்திடம் நீங்கள் புகாரளிக்கலாம்' என டெலிவரி மேன் பதிலளித்திருக்கிறார். அதையடுத்து, `நீங்கள் மோசமான நபர்' என கஸ்டமர் கூற, அதற்கும் `எனக்கு அதைப் பற்றிக் கவலையில்லை' என டெலிவரி மேன் கூலாக பதில் மெசேஜ் அனுப்பியிருக்கிறார்.

சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் இந்த ஸ்க்ரீன்ஷாட் குறித்து இணையவாசிகள் பலரும் கமென்ட் செய்துவருகின்றனர்.