Published:Updated:

மைனஸ் 35 டிகிரி செல்சியஸ்... அமெரிக்கா - கனடா எல்லையில் உறைந்த நிலையில் 4 இந்தியர்களின் உடல்கள்!

அமெரிக்கா - கனடா ( JOHN WOODS )

47 வயதாகும் ஷாண்ட் மனிதக் கடத்தலில் ஈடுப்பட்டுவந்திருக்கிறான். உரிய ஆவணங்கள் இன்றி பயணித்த இரண்டு இந்தியர்களைத் தன் வாகனத்தில் ஏற்றிச்சென்றிருக்கிறான்.

மைனஸ் 35 டிகிரி செல்சியஸ்... அமெரிக்கா - கனடா எல்லையில் உறைந்த நிலையில் 4 இந்தியர்களின் உடல்கள்!

47 வயதாகும் ஷாண்ட் மனிதக் கடத்தலில் ஈடுப்பட்டுவந்திருக்கிறான். உரிய ஆவணங்கள் இன்றி பயணித்த இரண்டு இந்தியர்களைத் தன் வாகனத்தில் ஏற்றிச்சென்றிருக்கிறான்.

Published:Updated:
அமெரிக்கா - கனடா ( JOHN WOODS )

அமெரிக்கா-கனடா எல்லையில், ஒரு கைக்குழந்தை உட்பட நான்கு பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த நிலையில் உறைந்த நிலையில் கண்டறியப்பட்ட உடல்கள் இந்தியர்களுடையவை என்றும், அதுவும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுடையவை எனவும் தெரியவந்துள்ளது. மைனஸ் 35 டிகிரி செல்சியஸ் குளிர் மற்றும் கடும் காற்றினிடையே இவர்கள் எல்லையைக் கடக்க முயன்றுள்ளனர் என்றும், அந்த முயற்சியில் உயிரிழந்தனர் என்றும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனடாவின் மத்திய மானிடோபா மாகாணத்தில் உள்ள எமர்சன் நகரத்திலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில், அமெரிக்க எல்லையில் இரண்டு பெரியவர்கள், ஒரு குழந்தை ஆகியோரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து எல்லையின் இருபுறமும் தேடியதில் நான்காவதாக ஒரு சிறுவனின் உடல் கண்டறியப்பட்டது. கனடாவின் போலீஸ் அறிக்கையில், ``கடும் குளிர் காரணமாக அவர்கள் அனைவரும் இறந்ததாகத் தெரிகிறது" எனக் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா - கனடா
அமெரிக்கா - கனடா
JOHN WOODS

அமெரிக்க அதிகாரிகள் இந்தத் துயர சம்பவத்தில் தொடர்புள்ளதாக ஃபுளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ஷாண்ட் என்பவனைக் கைதுசெய்துள்ளனர். 47 வயதாகும் ஷாண்ட் மனிதக் கடத்தலில் ஈடுப்பட்டு வந்திருக்கிறான்.

உரிய ஆவணங்கள் இன்றி பயணித்த இரண்டு இந்தியர்களைத் தன் வாகனத்தில் ஏற்றிச்சென்றிருக்கிறான். வாகனத்தின் உள்ளே, பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாட்டில், சிற்றுண்டிகள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ஷாண்ட் மற்றும் அவனுடன் பயணித்த இந்தியர்களை எல்லைக் காவல் படையிடம் அழைத்துச் செல்லும் வழியில் ​​​​அதிகாரிகள் ஐந்து இந்திய நாட்டவர்கள் நடந்து செல்வதைப் பார்த்ததாகத் தெரிவித்துள்ளனர்.

தாங்கள் எல்லையைத் தாண்டிச் சென்றதாகவும், சிலர் வந்து அழைத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்த்ததாகவும் சொன்னார்கள். அவர்கள் 11 மணி நேரத்துக்கும் மேலாக நடந்ததாக அவர்கள் கூறியுள்ளனர். அந்தக் குழுவில் ஒரு நபர் முதுகுப்பை ஒன்றை வைத்திருந்தார். அவர் நான்கு பேர்கொண்ட குடும்பத்துக்காக அதை எடுத்துச் செல்வதாக அதிகாரிகளிடம் கூறினார். அந்தப் பையில் ஆடைகள், டயப்பர் மற்றும் பொம்மைகள் இருந்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``மனிடோபாவின் எமர்சன் அருகே, கனடா-அமெரிக்க எல்லையை கடக்க முயன்ற நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தது எங்களுக்கு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்துள்ளது.

அமெரிக்கா - கனடா
அமெரிக்கா - கனடா
JOHN WOODS

அவர்களின் அன்புக்குரியவர்களுக்கு நாங்கள் எங்கள் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம், இந்த கடினமான நேரத்தில் எங்கள் எண்ணங்கள் அவர்களுடன் உள்ளன” எனக் கூறப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism