Published:Updated:

ஆப்கானிஸ்தான்: காபூல் குருத்வாரா அருகே குண்டுவெடிப்பு - இந்தியா கண்டனம்

ஆப்கானிஸ்தான் - குருத்வாரா

``குருத்வாரா கார்டே பர்வான் மீதான கோழைத்தனமான இந்தத் தாக்குதலை அனைவரும் கடுமையாகக் கண்டிக்க வேண்டும்." - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

ஆப்கானிஸ்தான்: காபூல் குருத்வாரா அருகே குண்டுவெடிப்பு - இந்தியா கண்டனம்

``குருத்வாரா கார்டே பர்வான் மீதான கோழைத்தனமான இந்தத் தாக்குதலை அனைவரும் கடுமையாகக் கண்டிக்க வேண்டும்." - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

Published:Updated:
ஆப்கானிஸ்தான் - குருத்வாரா

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில், குருத்வாரா அருகே இன்று காலை மர்ம நடப்பார்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்புச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காபூலின் கர்தே பர்வான் பகுதியிலுள்ள குருத்வாரா அருகே நடந்த இந்தத் தாக்குதலில் குருத்வாராவின் காவலர் உட்பட இருவர் இறந்திருப்பதாகவும், மேலும் பலர் இறந்திருக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் பலி எண்ணிக்கை குறித்து இதுவரை அதிகாரபூர்வ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை. மேலும், இதுவரை இந்தத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தச் சம்பவம் குறித்து ஆப்கானிஸ்தானின் டோலோ நியூஸ் நிறுவனம், ``காபூல் நகரின் கர்டே பர்வான் பகுதியில் பயங்கர வெடிச் சத்தம் கேட்டது. இந்தச் சம்பவத்தின் தன்மை மற்றும் உயிரிழப்புகள் பற்றிய விவரங்கள் இன்னும் தெரியவில்லை" என ட்வீட் செய்திருக்கிறது.

இத்தகைய தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ``குருத்வாரா கார்டே பர்வான் மீதான கோழைத்தனமான இந்தத் தாக்குதலை அனைவரும் கடுமையாகக் கண்டிக்க வேண்டும்" என ட்வீட் செய்திருக்கிறார். மேலும், இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான பாக்சி, ``குருத்வாரா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியாகும் செய்திகள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டிருக்கிறோம். அதுமட்டுமல்லாமல், நிலைமையை உன்னிப்பாக நாங்கள் கண்காணித்துவருகிறோம்" என்று கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism