Published:Updated:

`பென் ஸ்டோக்ஸ் டி-சர்ட்டில் பொறிக்கப்பட்ட தனது பெயர்!’ - நெகிழும் இந்திய மருத்துவர்

விகாஸ் குமார் - பென் ஸ்டோக்ஸ்
விகாஸ் குமார் - பென் ஸ்டோக்ஸ்

கிரிக்கெட் மீது விகாஸ் கொண்ட காதலுக்கு கிரிக்கெட் அளிக்கும் பரிசாக உலக கோப்பை இறுதிப்போட்டிநாயகனான பென் ஸ்டோக்ஸ் அணிந்திருந்த டி-சர்டில் அவரின் பெயர் இடம்பெற்றிருந்தது.

`எதிர்காலத்துல நீ என்னவாக ஆகப்போற?’ என்ற இந்தக் கேள்வி எல்லா குழந்தைகளிடமும் ஒருமுறையேனும் கேட்கப்பட்டிருக்கும். பெரும்பாலான குழந்தைகள் மருத்துவராகப் போகிறேன், இன்ஜினீயர் ஆகப்போகிறேன் என்று பதிலும் சொல்லியிருக்கும். வெகு சில குழந்தைகள் சச்சின், கங்குலி, தோனியைப் போன்று விளையாட்டு வீரர் ஆகப்போகிறேன் என்று சொல்லுவதுண்டு. அப்படிபட்ட குழந்தையாக இருந்தவர்தான் 'விகாஸ்குமார்'. தன் பெயர் பொறித்த டி-சர்ட் உடன் மைதானத்தில் இறங்க வேணடும் என்ற கனவு அவர் மருத்துவரான பின்பு நெகிழ்ச்சியாக நிறைவேறியுள்ளது.

`பென் ஸ்டோக்ஸ் டி-சர்ட்டில் பொறிக்கப்பட்ட தனது பெயர்!’ - நெகிழும்  இந்திய மருத்துவர்

கடந்த 110-க்கு நாள்களுக்கு மேலாக முடங்கிகிடந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் புத்துயிர் பெற்றுள்ளன. வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருந்து போராடி உலகத்தின் இயல்பு நிலைக்கு புதுரத்தம் பாய்ச்சுவது மருத்துவர்களே. அத்தகைய மருத்துவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக மருத்துவர்களின் பெயர்கள் பொறித்த சீருடையை அணிந்தவாறு பயிற்சி களத்தில் இறங்கியுள்ளனர் இங்கிலாந்து வீரர்கள்.

விகாஸ்குமார் குமார் இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர். இங்கிலாந்தின் டர்ஹாமில்லில் உள்ள டார்லிங்டன் நகரில் இங்கிலாந்து தேசிய சுகாதார சேவை (என்.ஹெச்.எஸ்) அறக்கட்டளை மருத்துவமனையின் முக்கிய பிரிவில் பணிபுரிகிறார். கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் கொண்ட மருத்துவர் விகாஸ் குமார் சில கிரிக்கெட் கிளப்களால் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களின் `ரைஸ் தி பேட்’ பிரசாரத்துக்கு பரிந்துரைக்கப்பட்டவர். கிரிக்கெட் மீது விகாஸ் கொண்ட காதலுக்கு கிரிக்கெட் அளிக்கும் பரிசாக உலக கோப்பை இறுதிப்போட்டிநாயகனான பென் ஸ்டோக்ஸ் அணிந்திருந்த டி-சர்டில் அவரின் பெயர் இடம்பெற்றிருந்தது.

``என் பெயர் அணிந்திருந்த டி-சர்டை ஸ்டோக்ஸ் அணிந்திருந்தார் என்னும் செய்தி வெளியானதைப் பார்த்தபோது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. வைரஸ் பரவல் நம் அனைவருக்கும் மிகவும் கடினமாக இருந்தது. என்.ஹெச்.எஸ் ஊழியர்கள் நிறைய தியாகங்களைச் செய்துள்ளனர். இந்த அங்கீகாரம் இந்தியாவில் உள்ள என் மருத்துவ நண்பர்கள் உட்பட முழு மருத்துவ சகோதரத்துவத்துக்கும் சேர்ந்தது” என்றார் மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் அநஸ்திசியாவில் முதுகலை டிப்ளோமா முடித்த டெல்லி பல்கலைக்கழக முன்னாள் மாணவரான விகாஸ் குமார்.

குமார் கடந்த 2019-ம் ஆண்டு மனைவி மற்றும் குழந்தையுடன் இங்கிலந்துக்கு குடியேறினார், ஆசிய வம்சாவளி வீரர்களால் தொடங்கப்பட்ட கில்லிபாய்ஸ் அமெச்சுர் கிளப், நியூ காஸ்டெலில் உள்ள கௌகேட் கிரிக்கெட் கிளப் ஆகிய கிளப்களுக்காக விளையாடி வருகிறார். "நான் ஒரு கிரிக்கெட் ரசிகன், என்னுடைய மருத்துவக் கல்லூரிக்காக விளையாடினேன். ஆனால், இந்த குடும்பத்தினர் அனைவரும் படித்தவர்கள், எனவே நானும் என் சகோதரர்களைப் போல ஒரு மருத்துவராக வேண்டிய கட்டாயம் எழுந்தது" என்று கூறி புன்னகைக்கிறார் குமார்.

மேலும் இந்திய மருத்துவர்களான நார்விச்சை சேர்ந்த மருத்துவர் ஜமாஸ்ப் கைகுஸ்ரூ டஸ்டர் , ஹரிகிருஷ்ணா ஷா மற்றும் பிசியோதெரபிஸ்டான கிருஷன் அக்தா ஆகியோர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் போட்டிக்கான ரைஸ் தி பேட் பிரச்சாரத்தில் இடம்பெற்றுள்ளனர்.

ஜோஸ் பட்லரின் டி-சர்டில் டட்ஸ்டரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. நார்விச் பல்கலைகழக மருத்துவமனையில் அறுவைசிகிச்சை நிபுணராகப் பணிபுரிந்து வரும் இவர் 2003-ம் ஆண்டு மும்பையில் இருந்து இங்கிலந்துக்கு குடியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 42 வயதாகும் இவர் "கிரிக்கெட் மீது நான் கொண்ட காதல் என் தாத்தா, அப்பாவிடம் இருந்து எனக்கு கிடைக்கப்பெற்றது. கடந்த ஆண்டு என் அப்பா எங்களை விட்டுப் பிரிந்துவிட்டார். எனவே, அவரது பெயரையும் டி-சர்டில் சேர்க்க வேண்டி கேட்டுக்கொண்டுள்ளேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு