Published:Updated:

இங்கிலாந்து புதிய அமைச்சரவை; ஒரேயொரு இந்திய வம்சாவளி எம்.பி சுயெல்லா பிரேவர்மேனுக்கு வாய்ப்பு?

பிரிட்டன் தேர்தல்

புதிய அமைச்சரவையில், இந்தியப் வம்சாவாளியை சேர்ந்த ஒரே இங்கிலாந்து அரசியல்வாதியான சுயெல்லா பிரேவர்மேன் இருக்கக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 42 வயதான சுயேல்லா பிரேவர்மேன், தற்போது இங்கிலாந்து அரசின் அட்டர்னி ஜெனரல் பதவியை வகித்து வருகிறார்.

இங்கிலாந்து புதிய அமைச்சரவை; ஒரேயொரு இந்திய வம்சாவளி எம்.பி சுயெல்லா பிரேவர்மேனுக்கு வாய்ப்பு?

புதிய அமைச்சரவையில், இந்தியப் வம்சாவாளியை சேர்ந்த ஒரே இங்கிலாந்து அரசியல்வாதியான சுயெல்லா பிரேவர்மேன் இருக்கக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 42 வயதான சுயேல்லா பிரேவர்மேன், தற்போது இங்கிலாந்து அரசின் அட்டர்னி ஜெனரல் பதவியை வகித்து வருகிறார்.

Published:Updated:
பிரிட்டன் தேர்தல்

இங்கிலாந்து பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை அடுத்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்காக தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்றது. இதில், கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் ரிஷி சுனக்கை தோற்கடித்து, வெளியுறவுச் செயலாளர் லிஸ் ட்ரஸ், புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.

இவரின் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரே இங்கிலாந்து அரசியல்வாதியான சுயெல்லா பிரேவர்மேன் இருக்கக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இவரின் அமைச்சரவையில் முக்கியப் பதவிகளில் வெள்ளையர்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Rishi Sunak
Rishi Sunak

இந்திய வம்சாவளியை சேர்ந்த 42 வயதான சுயேல்லா பிரேவர்மேன், தற்போது இங்கிலாந்து அரசின் அட்டர்னி ஜெனரல் பதவியை வகித்து வருகிறார். ஜூலை மாதத்தில் எம்.பி.க்களின் இரண்டாவது சுற்று வாக்குப்பதிவில் நாக் அவுட் ஆன பிறகு, லிஸ் ட்ரஸ்ஸுக்கு ஆதரவை அளிக்க முன்வந்ததோடு, தனது ஆதரவாளர்களையும் லிஸ் ட்ரெஸ்ஸை பின்பற்றுமாறு அழைப்பு விடுத்தார்.

மேலும்,``லிஸ் ட்ரஸ் இப்போது பிரதமராகத் தயாராக உள்ளார். அவர், இப்பணியை கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. கடினமான இப்பணியை அவர் சரியாகச் செய்ய வேண்டும். அடுத்த ஆறு வருடங்கள் மிக கடுமையாக இருப்பதுடன், அதனை நிலை நிறுத்துவது மிக முக்கயமானது" என்று பிரேவர்மேன் கூறியிருந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில், தனக்கு ஆதரவளித்த பிரவேர்மேனை, தனது அமைச்சரவையில் லிஸ் ட்ரஸ் சேர்க்கவும், அவருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியை வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. சட்ட விரோதமாக குடியேறும் விவகாரம், இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் ருவாண்டாவிற்கு நாடு கடத்தப்படுவது உள்ளிட்ட விவகாரங்கள், பிரேவர்மேன் முன்புள்ள சவால்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Suella Braverman
Suella Braverman
AP

சுயெல்லா பெர்னாண்டஸ் பிரேவர்மேனின் தந்தையான கிறிஸ்டி பெர்னாண்டஸ் ஒரு நைரோபி ஆவர். இவர் மொரீஷியஸை சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உமாவை திருமணம் செய்து கொண்டார். சுயெல்லா பெர்னாண்டஸின் அம்மா உமா பெர்னாண்டஸ், செவிலியர், உள்ளூர் கவுன்சிலர் மற்றும் பாராளுமன்ற வேட்பாளராக இருந்தார். அவரின் தந்தை, கிறிஸ்டி பெர்னாண்டஸ், கோவாவை சேர்ந்த சமூக ஆர்வலராவார்.