Published:Updated:

இந்திய வம்சாவளிப் பெண் மீது இனவெறி பாகுபாடு? - ஸ்காட்லாந்து காவல்துறை மீது வழக்கு பதிவு

பர்ம் சந்து என்ற இந்திய வம்சாவளிப் பெண் இனவெறி தொடர்பாக ஸ்காட்லாந்து காவல்துறை மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

பர்ம் சந்து
பர்ம் சந்து ( Twitter/@SuptParm )

பர்ம் சந்து (Parm Sandhu) என்ற 54 வயதான இந்திய வம்சாவளிப் பெண் 1989-ம் ஆண்டு ஸ்காட்லாந்து காவல்துறையில் இணைந்து பணிபுரிந்து வருகிறார். அந்த நாட்டுக் காவல் பிரிவில் வெள்ளையல்லாத சில அதிகாரிகளில் இவரும் ஒருவர். இவர் தற்போது தற்காலிக தலைமை கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.

பர்ம் சந்து
பர்ம் சந்து
Twitter/@SuptParm

இந்த நிலையில் பர்ம் சந்து, இங்கிலாந்து ராணியின் காவல்துறை பதக்கத்தைப் பெறுவதற்காக சட்டத்தை மீறியதாக சமீபத்தில் இவர் மீது தவறாக குற்றம் சுமத்தப்பட்டது. அந்தக் குற்றம் உண்மையல்ல என நிரூபித்த பிறகு தற்போது, காவல்துறையில் தனக்கு இன ரீதியிலான பாகுபாடு நிகழ்வதாக புகார் அளித்துள்ளார்.

இந்திய வம்சாவளி கறுப்பின பெண் என்பதாலும் பாலின பாகுபாடு காரணமாகவும் தனக்கு உயர் பதவிகளும், வேலைவாய்ப்புகளும் மறுக்கப்படுவதாகக் கூறி ஸ்காட்லாந்து காவல்துறை மீது வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

பர்ம் சந்து
பர்ம் சந்து
Twitter/@SuptParm

அந்நாட்டு விதிகளின்படி காவல்துறை அதிகாரிகள் தங்களுக்கு பதக்கம் வழங்குவது தொடர்பாக பிற காவலர்களிடம் தன்னை பரிந்துரைக்கக் கூறியோ, அதில் பங்களிக்கவோ, பதக்கத்தின் நிலை பற்றி அறிந்துகொள்ளவோ முயற்சி செய்யக் கூடாது. ஆனால் சந்து, இங்கிலாந்து ராணி காவல்துறை பதக்கத்துக்காக சக காவலர்கள் தன்னை ஆதரிக்கும்படி கேட்டுக்கொண்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. தன் மீதான குற்றச்சாட்டிலும் உள்நோக்கம் உள்ளதாக சந்து குற்றம் சுமத்தியுள்ளார்.