Published:Updated:

செல்லப் பிராணியோடு பயணிக்க அனுமதி மறுக்கப்பட்ட இந்திய மாணவர்; உக்ரைனிலிருந்து நாடு வந்து சேர்ந்தார்!

தனது செல்லப் பிராணியோடு ரிஷப் கௌசிக்

செல்லப் பிராணியோடு இந்தியா வர அனுமதி மறுக்கப்பட்ட ரிஷப் கௌசிக் உக்ரைனிலிருந்து நாடு வந்து சேர்ந்தார்.

செல்லப் பிராணியோடு பயணிக்க அனுமதி மறுக்கப்பட்ட இந்திய மாணவர்; உக்ரைனிலிருந்து நாடு வந்து சேர்ந்தார்!

செல்லப் பிராணியோடு இந்தியா வர அனுமதி மறுக்கப்பட்ட ரிஷப் கௌசிக் உக்ரைனிலிருந்து நாடு வந்து சேர்ந்தார்.

Published:Updated:
தனது செல்லப் பிராணியோடு ரிஷப் கௌசிக்

ரிஷப் கௌசிக் உத்தரகாண்ட் டேராடூனைச் சேர்ந்த 21 வயது மாணவர். உக்ரைன் கார்கிவ் நேஷனல் கல்லூரியில் பொறியியல் படித்து வந்தார். உக்ரைனில் உருவாகியுள்ள போர்ச் சூழலால் அங்கு படிக்கச் சென்ற மாணவர்கள் இந்தியாவுக்குத் திரும்பி வருகின்றனர். ரிஷப் திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதும் அவர் திரும்ப மறுத்துவிட்டார். காரணம் அவரது செல்ல பிராணியான மாலிபு. கலப்பின வகையைச் சேர்ந்த நாயைத் தனியே விட்டு வர மறுத்து, தன்னுடன் அழைத்து வருவதற்கான ஏற்பாட்டைச் செய்த போதும் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.

"நாய்கள் பாதுகாப்பு மையத்தில் விட்டு வரலாம். ஆனால் போரின் போது அதன் பாதுகாவலர்கள் கைவிடும் நிலை ஏற்படலாம். எனக்கு குடும்பம் இருக்கிறது. ஆனால் மாலிபுக்கு நான் மட்டும் தான். NOC கிடைக்க உதவி செய்யுங்கள்" என ட்விட்டரில் கோரிக்கை வைத்திருந்தார் ரிஷப். போதுமான ஆவணங்கள் இல்லை என அவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் போர்ச்சூழலால் அவற்றைப் பெற இயலவில்லை எனத் தெரிவித்திருந்தார் ரிஷப்.

பெங்களூரை மையமாக கொண்டு செயல்படும் Felcan Pet Relocation Worldwide நிறுவனம் ரிஷப் மற்றும் அவரது செல்லப்பிராணியான மாலிபு இருவரையும் இந்தியா கொண்டு வர தேவையான ஏற்பாடுகளைச் செய்வதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில் இரண்டு நாள்களுக்கு முன் ரிஷப்பும் மாலிபும் உக்ரைன் எல்லையைக் கடந்து ஹங்கேரி நாட்டிற்கு வந்தடைந்தனர். ஹங்கேரி புடாபெஸ்ட் விமான நிலையத்தில் இருந்து இந்தியாவிற்கு இன்று தன்னுடைய செல்லப் பிராணியுடன் வந்தடைந்தார் ரிஷப். அவரை நெகிழ்ச்சியோடு அவரது பெற்றோர் வரவேற்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism