Published:Updated:

`திரும்பி வந்தால் என்னைக் கொன்றுவிடுவான், காப்பாற்றுங்கள்!’ -ஷார்ஜாவில் கதறிய இந்தியப் பெண்

ஜாஸ்மின்
ஜாஸ்மின்

என் பெற்றோர் வீட்டுக்குக்கூட செல்ல அனுமதிக்கவில்லை. சமையலறைக்குள் என்னை விடமாட்டார், பூட்டி வைத்துவிடுவார். தினமும் ஒருவேளை மட்டுமே உணவு கொடுத்துவந்தார்.

அந்தப் பெண்மணியின் வலது கண்கள் வீங்கி ரத்தம் கொட்டிக்கொண்டிருக்கிறது. அவர் தன் முன்னால் உள்ள கேமராவைப் பார்த்து, `பாருங்கள்.. என்னை என்ன செய்துவைத்துள்ளான் என்று, காப்பாற்றுங்கள், அவன் என்னை அடிக்கிறான். அவன் எப்போது வேண்டுமானாலும் வரலாம், அப்படி வந்தால் என்னைக் கொன்றுவிடுவான்’ எனக் கதறி அழுகிறார். அந்தப் பெண் அழும் வீடியோ காட்சிகள் வெளியாகி, நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மணி நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் அந்த வீடியோவை ஷேர் செய்துள்ளனர்.

தாக்குதல்
தாக்குதல்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் 33 வயதான ஜாஸ்மின் சுல்தானா. இவருக்குக் கடந்த 2012-ம் ஆண்டு முகமது கிஸார் உலா என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்கு முன்னதாக ஒரு நிறுவனத்தில் ஹெச்.ஆராக வேலை செய்துவந்துள்ளார். திருமணம் முடிந்த பிறகு தன் கணவருடன் ஷார்ஜாவில் வாழ்ந்துவந்துள்ளார் ஜாஸ்மின்.

இந்நிலையில், தன் கணவர் மிகவும் மோசமாகத் தன்னை துன்புறுத்துவதாகவும் கடுமையாகத் தாக்குவதாகவும் கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலான பிறகு ஷார்ஜா போலீஸார் முகமது கிஸாரைக் கைதுசெய்துள்ளனர். ஆனால், ஜாஸ்மினின் பாஸ்போர்ட் போன்ற அனைத்து விஷயங்களும் கிஸாரிடம் சிக்கியுள்ளதால், அவற்றை மீட்டு தன்னை எப்படியாவது ஹைதராபாத்துக்கு அழைத்துச் செல்லுமாறு இந்திய வெளியுறவுத் துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளார் ஜாஸ்மின்.

கைது
கைது

கணவரால் தனக்கு நடந்த துயரங்கள் குறித்து ஷார்ஜாவில் உள்ள ஒரு ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ள ஜாஸ்மின், `` 2012-ம் ஆண்டு எனக்குத் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே எனக்கும் என் கணவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. முதலில் அவர் என்னைக் கடுமையாகச் சாடிப் பேசினார். அதற்குள் எங்களுக்குக் குழந்தை பிறந்தது. பின்னர் என் கணவர் என்னை அடிக்கத் தொடங்கினார். கடந்த 6 வருடங்களில் மட்டும் பலமுறை அவர் என்னைக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

`50 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த தம்பதி!' - இறப்பிலும் இணைபிரியாத கணவன் - மனைவி

ஒவ்வோர்முறை என்னை அடிக்கும்போதும் மருத்துவமனையில் தான் எங்கள் சண்டை முடிவடையும். அவரே என்னை அடித்துவிட்டு என் பெற்றோர்களுக்கு போன் செய்து வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்துவார். அப்போதெல்லாம் தான் தவறு செய்துவிட்டதாகவும் இனிமேல் அப்படி நடந்துகொள்ளமாட்டேன் என்றும் என்னிடமும் என் பெற்றோரிடமும் கெஞ்சுவார். இதில் இரக்கப்பட்ட நாங்கள் அவரை மன்னித்துவிடுவோம்.

ஜாஸ்மின்
ஜாஸ்மின்

இப்படியே சில வருடங்கள் ஓடிவிட்டன. ஒரு கட்டத்தில் என்னை ஹைதராபாத்தில் உள்ள மாமியாரின் வீட்டுக்குக் கொண்டுவந்து விட்டார். ` இனி ஷார்ஜாவுக்கு வர மாட்டேன்' என என் கணவரிடம் உறுதியாகக் கூறிவிட்டேன். ஒரு வருடம் மாமியார் வீட்டில் இருந்தேன். என் மாமியாரும் என்னை அதிகமாகக் கொடுமைப்படுத்தினார். என் பெற்றோர் வீட்டுக்குக்கூட செல்ல அனுமதிக்கவில்லை. சமையலறைக்குள் என்னை விடமாட்டார், பூட்டி வைத்துவிடுவார். தினமும் ஒருவேளை மட்டுமே உணவு கொடுத்துவந்தார். சில நாள்களில் அதுவும் இல்லாமல் வெறும் தண்ணீர் மட்டுமே குடித்து வாழ்ந்துள்ளேன்.

இந்த நிலையில், ஹைதராபாத் வந்த என் கணவர் மீண்டும் என்னிடம் கெஞ்சினார், மன்னிப்பு கேட்டார். இனி என்னைப் பாசமாகப் பார்த்துக்கொள்கிறேன் எனக் கூறி கடந்த வருடம் ஷார்ஜா அழைத்துச்சென்றார். இங்குவந்த சிறிது நாள்கள் நன்றாக இருந்த அவர் மீண்டும் என்னைக் கொடூரமாகத் தாக்கத் தொடங்கிவிட்டார். என் கணவரைப் பற்றிப் பலமுறை ஷார்ஜா காவலர்களிடத்தில் புகார் அளித்தும் எந்தப் பலனும் இல்லை. இறுதியாகக் கடந்த செவ்வாய்க்கிழமை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியவர், மீண்டும் என்னைக் கண்மூடித்தனமாகத் தாக்கினார்.

தாக்குதல்
தாக்குதல்

வலி தாங்கமுடியாமல் நான் அலறி, வீட்டைவிட்டு வெளியில் ஓடிவிட்டேன். பின்னர் அருகிலிருந்தவர்களிடம் விவரத்தைக் கூறி வீடியோ வெளியிட்டேன். இனியும் நான் எதுவும் செய்யவில்லை என்றால் என்னைக் கொன்றுவிடுவார் என்ற பயத்தில்தான் வீடியோவை வெளியிட்டேன்” எனப் பேசியுள்ளார்.

ஜாஸ்மின் வெளியிட்ட வீடியோவை பார்த்த இந்திய வெளியுறவுத் துறை, அவருக்கு உதவி செய்வதாக அறிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு