Published:Updated:

இந்தோனேசியாவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 44 பேர் பலி, 700-க்கும் மேற்பட்டோர் காயம்!

நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 44 பேர் உயிரிழந்தனர்.

இந்தோனேசியாவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 44 பேர் பலி, 700-க்கும் மேற்பட்டோர் காயம்!

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 44 பேர் உயிரிழந்தனர்.

Published:Updated:
நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது மக்களைப் பெரிதும் அச்சத்துக்குள்ளாக்கியிருக்கிறது. அந்த நாட்டின் மேற்கு ஜாவாவில், 5.6 ரிக்டர் அளவில் பதிவாகியிருக்கும் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், நகரின் பல்வேறு கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

நிலநடுக்கம்
நிலநடுக்கம்

மேலும் இந்த நிலநடுக்கம், தலைநகர் ஜாகர்த்தா (Jakarta) வரை ஏற்படுத்திய நில அதிர்வை மக்கள் உணர்ந்திருக்கின்றனர். இதில் அச்சமடைந்த மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி சாலைக்கு வந்தனர். இந்த நிலையில், நிலநடுக்கத்தால் சுமார் 44 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 700-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பெரும்பாலானோர் கட்டட இடிபாடுகளில் சிக்கித் தவிக்கின்றனர் என்று கூறப்படுகிறது. அதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு சாலையோரங்களிலேயே முதலுதவி உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவருகின்றன.

நிலநடுக்கம் ஏற்பட்ட இடங்களில் பாதிக்கப்பட்டவர்களை மீட்புப் பணியாளர்கள் மீட்டுவருகின்றனர். மேலும், இந்த நிலநடுக்கதால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன. இருப்பினும், சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இதுவரை எந்தவோர் அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.