Published:Updated:

ட்விட்டரில் ட்ரெண்டாகும் `RIP Twitter' ஹேஷ்டேக்; இன்ஸ்டாகிராம் பதிவிட்ட `ட்வீட்'

எலான் மஸ்க்

`RIP Twitter' ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வரும் நிலையில், அதற்கு இன்ஸ்டாகிராம் ட்வீட் செய்திருக்கிறது.

ட்விட்டரில் ட்ரெண்டாகும் `RIP Twitter' ஹேஷ்டேக்; இன்ஸ்டாகிராம் பதிவிட்ட `ட்வீட்'

`RIP Twitter' ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வரும் நிலையில், அதற்கு இன்ஸ்டாகிராம் ட்வீட் செய்திருக்கிறது.

Published:Updated:
எலான் மஸ்க்
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் தன் வசப்படுத்தியதிலிருந்து தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதிலும் குறிப்பாக ஊழியர்களின் பணிநீக்கம் என்பது பேசுபொருளாகவே மாறியிருந்தது.

ட்விட்டர் நிறுவனத்தில் 7,500 பேர் பணியாற்றி வந்த நிலையில், சுமார் 3,700 பேர் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். பின், `` ட்விட்டர் நிறுவனத்தை லாபகரமானதாகக் கொண்டு செல்ல ஊழியர்கள் அதிக நேரம் பணி செய்ய வேண்டியிருக்கும். அதிக நேரம் வேலை செய்ய விருப்பம் இல்லாதவர்கள் விலகிக்கொள்ளலாம்" என்றும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.

இன்ஸ்டாகிராம்
இன்ஸ்டாகிராம்

இதனைத் தொடர்ந்து நவம்பர் 21-ம் தேதி வரை ட்விட்டர் நிறுவனத்தின் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. எலான் மஸ்கின் இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் ராஜினாமா கடிதங்களை அனுப்பி வருகின்றனர். நவம்பர் 21-ம் தேதி வரை ட்விட்டர் நிறுவனத்தின் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் நெட்டிசன்கள் #RIPTwitter என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து  #RIP ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வரும் நிலையில் ‘We Love Twitter’ என இன்ஸ்டாகிராம் தன் ட்விட்டர் பக்கத்தில் `ட்வீட்' செய்திருக்கிறது.