Published:Updated:

`பக்கிங்ஹாம் பேலஸ் என்ன விலைன்னு கேளு' - அசர வைக்கும் லண்டன் மாளிகையின் ஒரு மாத வாடகை!

பக்கிங்ஹாம் அரண்மனை

ஏன் இவ்வளவு வாடகை என்பதற்கு அரண்மனையின் மொத்த மதிப்பு சொன்னால் உங்களுக்குப் புரிந்துவிடும்.

`பக்கிங்ஹாம் பேலஸ் என்ன விலைன்னு கேளு' - அசர வைக்கும் லண்டன் மாளிகையின் ஒரு மாத வாடகை!

ஏன் இவ்வளவு வாடகை என்பதற்கு அரண்மனையின் மொத்த மதிப்பு சொன்னால் உங்களுக்குப் புரிந்துவிடும்.

Published:Updated:
பக்கிங்ஹாம் அரண்மனை

அதிகபட்சமாக ஒரு அறையை எவ்வளவு வாடகைக்கு எடுக்கலாம்? அது ஒவ்வொருவரின் வசதியையும் நிலையையும் பொறுத்தது. சரி, ஒரு வேளை நீங்க லண்டன் அரச குடும்பத்தின் மாளிகையில் தங்க விரும்பினால் எவ்வளவு செலவழிக்க வேண்டியிருக்கும் தெரியுமா? இப்படியான ஆய்வு ஒன்று சமீபத்தில் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

McCarthy Stone மேற்கொண்ட இந்த ஆய்வில் 775 அறைகள் கொண்ட பக்கிங்ஹாம் அரண்மனையில், அரச குடும்பத்தினர் வாடகைக்குக்குக் கொடுக்க ஒப்புக்கொண்டால், ஒரு மாதத்திற்கான வாடகை 2.6 மில்லியன் பவுண்ட்ஸ். இந்திய மதிப்பில் ரூபாய் 25 கோடியே 45 இலட்சம்.

இந்தத் தொகைக்கு ஒரு அரண்மனையே கட்டிடாலாமே என யோசிக்கிறீங்களா... ஏன் இவ்வளவு வாடகை என்பதற்கு அரண்மனையின் மொத்த மதிப்பு சொன்னால் உங்களுக்குப் புரிந்துவிடும்.

அரச குடும்பத்தினர்
அரச குடும்பத்தினர்

இந்த அரண்மனையின் மொத்த மதிப்பு 1.3 பில்லியன் பவுண்ட்ஸ். இந்திய மதிப்பில் ரூ. 10,082 கோடி. அரச குடும்பத்தின் பெயரில் இருக்கும் மாளிகைகள், விடுதிகள் எல்லாமும் சேர்த்தால் 30,000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பு இருக்கும்.

பக்கிங்ஹாம் அரண்மனை 1703-ம் ஆண்டில் ஜான் ஷேஃபீல்ட் மன்னருக்காகக் கட்டப்பட்டது. பின்னர் மூன்றாம் கிங் ஜார்ஜ், அரசி சார்லேட்டுக்காக வாங்கினார். 19-ம் நூற்றாண்டில் இந்த அரண்மனை விரிவுபடுத்தப்பட்டது. குயின் விக்டோரியா 1837-ல் பொறுப்பேற்ற பின்பு இது அரச குடும்பத்தின் மாளிகையானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த மதிப்பீடு ஒவ்வொரு சொத்தின் அளவு, அறைகளின் அளவு, உள்ளிட்டவை கொண்டு அளவிடப்பட்டது. ஒரு சொத்தை விற்பதற்கோ வாடகை விடவோ மதிப்பிடுவதுபோல இதனை மதிப்பிட முடியாது. ஏனென்றால் இது லண்டனின் பாரம்பரிய அடையாளங்களுள் ஒன்று. இந்த மதிப்பீடு வருகிற வாரத்தில் நடக்கவிருக்கும் இங்கிலாந்து அரசியின் ப்ளாட்டினம் ஜூப்ளி விழா பற்றிய பரபரப்பைக் காட்டுகிறது. 25 கோடி வாடகை கொடுக்கிறளவுக்கு வளரணும் பாஸு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism