Published:Updated:

நியூஸ் எம்பஸி

நியூஸ் எம்பஸி
பிரீமியம் ஸ்டோரி
நியூஸ் எம்பஸி

மத்திய கிழக்கு நாடான கௌதமாலாவில், எரிமலையின் தீப்பிழம்பில் பீட்ஸா செய்து அசத்திவருகிறார் 34 வயதான டேவிட் கார்சியா

நியூஸ் எம்பஸி

மத்திய கிழக்கு நாடான கௌதமாலாவில், எரிமலையின் தீப்பிழம்பில் பீட்ஸா செய்து அசத்திவருகிறார் 34 வயதான டேவிட் கார்சியா

Published:Updated:
நியூஸ் எம்பஸி
பிரீமியம் ஸ்டோரி
நியூஸ் எம்பஸி

மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸுக்கும் அவர் மனைவி மெலிண்டாவுக்குமான விவாகரத்தைத் தொடர்ந்து, பில் கேட்ஸ் குறித்த சர்ச்சை செய்திகள்தான் பத்திரிகைகளின் ஹாட் டாபிக். அதில் ஒன்றாக, மைக்ரோசாஃப் நிறுவனத்தைச் சேர்ந்த பெண் ஊழியர் ஒருவருக்கும் நீண்டகால உறவு இருந்ததாகவும், அது குறித்து மைக்ரோசாஃப்ட் போர்டு குழுவிலிருந்து பில் கேட்ஸ் விலகுவதற்கு முன்பாக அந்த நிறுவனம் விசாரணை நடத்தியதாகவும் `வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது. பில் கேட்ஸுடன் தான் பாலியல் உறவில் இருந்ததாகக் கடிதம் மூலம் பெண் ஊழியர் தெரிவித்ததை அடுத்து, மைக்ரோசாஃப்ட் போர்டு, சட்ட நிறுவனம் ஒன்றை நியமித்து 2019 முதல் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கிறது வால் ஸ்ட்ரீட் செய்தி.

 பில் கேட்ஸ்
பில் கேட்ஸ்

`பெண் ஊழியருடன் பில் கேட்ஸ் வைத்திருந்த உறவு முறையானதல்ல என்பதால், அவர் மைக்ரோசாஃப்ட் போர்டு மெம்பராக நீடிக்கத் தகுதியற்றவர்’ என்று மைக்ரோசாஃப்ட் கார்ப்பரேஷன் முடிவெடுத்ததாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்த பில் கேட்ஸின் செய்தித் தொடர்பாளர், ‘‘20 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த உறவு அது. அந்த உறவு சுமுகமாக முடிந்துவிட்டது. பில் கேட்ஸ் போர்டிலிருந்து விலகியதற்கும், இந்தச் சம்பவத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை’’ என்று சொல்லியிருக்கிறார்.

நியூஸ் எம்பஸி

1983-ல் அமெரிக்காவின் சவுத் கரோலினா பகுதி அருகேயிருக்கும் மளிகைக் கடை ஒன்றில், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருந்த 11 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கில் 19 வயதுடைய ஹென்றி மெக்கொல்லம், 15 வயதுடைய லியான் பிரவுன் ஆகிய சகோதரர்கள் கைதுசெய்யப்பட்டனர். 31 ஆண்டுகள் கழித்து, 2014-ம் ஆண்டு நடந்த டி.என்.ஏ சோதனையின் மூலம் இவர்கள் இருவரும் குற்றமற்றவர்கள் என்று நிரூபணம் ஆனது. 2015-ல், `செய்யாத குற்றத்துக்காக தண்டனை பெற்று வாழ்க்கையை இழந்துவிட்டதாக’ இருவரும் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இந்த வழக்கில் கடந்த வாரம், ``இருவருக்கும் சேர்த்து ரூ.550 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தீர்ப்பு குறித்து கருத்து கூறிய ஹென்றி, ‘‘செய்யாத குற்றத்துக்காகப் பல பேர் சிறையில் தண்டனை பெற்றுவருகின்றனர். எங்களைப்போல அவர்களும் விடுதலை பெற வேண்டும் என்பதே என் ஆசை’’ என்றிருக்கிறார்.

நியூஸ் எம்பஸி

மத்திய கிழக்கு நாடான கௌதமாலாவில், எரிமலையின் தீப்பிழம்பில் பீட்ஸா செய்து அசத்திவருகிறார் 34 வயதான டேவிட் கார்சியா. Pacaya எரிமலை அவ்வப்போது தீப்பிழம்புகளைக் கக்குவது வழக்கம். எனவே, அந்தப் பகுதியிலிருக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அந்த நாட்டு அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது. இந்தநிலையில், எரிமலையிலிருந்து வெடித்துச் சிதறி அடிவாரத்துக்கு வழிந்துவரும் தீப்பிழம்புகளில், பாதுகாப்பு கவச உடைகளுடன் பீட்ஸா செய்துவருகிறார் டேவிட். இந்த பீட்சாவைச் சுவைத்தவர்கள், இது தனிச்சுவை கொண்டிருப்பதாகத் தெரிவிக்கின்றனர். எரிமலையைக் காண வரும் சுற்றுலாப்பயணிகள் விரும்பிச் சாப்பிடும் உணவாக மாறியிருக்கிறது `Pacaya பீட்ஸா!’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism