Published:Updated:

நியூஸ் எம்பஸி

மகாவா எலி
பிரீமியம் ஸ்டோரி
மகாவா எலி

தன் பணிக்காலத்தில் 1,41,000 சதுர மீட்டர் நிலப்பரப்பைக் கிளறி, 71 கண்ணிவெடிகளையும் சுமார் 40 வெடிமருந்துப் பொருள்களையும் கண்டுபிடித்திருக்கிறது மகாவா

நியூஸ் எம்பஸி

தன் பணிக்காலத்தில் 1,41,000 சதுர மீட்டர் நிலப்பரப்பைக் கிளறி, 71 கண்ணிவெடிகளையும் சுமார் 40 வெடிமருந்துப் பொருள்களையும் கண்டுபிடித்திருக்கிறது மகாவா

Published:Updated:
மகாவா எலி
பிரீமியம் ஸ்டோரி
மகாவா எலி
நியூஸ் எம்பஸி

பாகிஸ்தானின் குவெட்டா மாவட்டம், கரோட்டாபாத்தில் வீட்டுக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த ஐந்து சிறுவர்கள் கையெறி குண்டு ஒன்றைக் கண்டெடுத்திருக்கிறார்கள். அது என்னவென்று தெரியாமல், முதலில் அதைப் பந்துபோல் தூக்கி எறிந்து விளையாடியிருக்கிறார்கள். பின்னர், பெரிய கல் ஒன்றைக்கொண்டு குண்டை உடைக்க முற்பட்டபோது, அது வெடித்துச் சிதறியதாகச் சொல்லப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் மூன்று சிறுவர்கள் உயிரிழந்துவிட்டனர். இரண்டு பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஆப்கானிஸ்தானிலிருந்து கள்ளச்சந்தை மூலம் பாகிஸ்தானுக்கு வரும் கையெறி குண்டுகளை, விளையாட்டுப்பொருள் என நினைத்து விளையாடியதில் இதுவரை பல குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக பாகிஸ்தான் காவல்துறை கூறியிருக்கிறது. எனவே, இந்த விவகாரத்தில், சர்வதேசக் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃப் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற குரல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. #உயிரோடு விளையாடாதீங்க!

நியூஸ் எம்பஸி

கம்போடிய ராணுவத்தில் வெடிகுண்டுகளைக் கண்டறியும் பணியில், மோப்ப நாய்களைப்போலச் சிறப்பாகச் செயல்பட்டு, கம்போடிய ராணுவத்தின் செல்லப்பிள்ளையாக வலம்வந்த மகாவா எலி ஐந்தாண்டு காலமாகச் சேவையாற்றிவிட்டு, தற்போது பணியிலிருந்து ஓய்வுபெற்றிருக்கிறது. தன் பணிக்காலத்தில் 1,41,000 சதுர மீட்டர் நிலப்பரப்பைக் கிளறி, 71 கண்ணிவெடிகளையும் சுமார் 40 வெடிமருந்துப் பொருள்களையும் கண்டுபிடித்திருக்கிறது மகாவா. டென்னிஸ் மைதானத்தின் பரப்பளவுகொண்ட நிலத்தை, 20 நிமிடங்களில் கிளறி சோதனை நடத்திவிடும் இந்த மகாவா. கடந்த ஆண்டு, இங்கிலாந்தைச் சேர்ந்த `நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்கான மக்கள் மருந்தக அமைப்பு’ ஒன்று, மகாவாக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவித்தது. இந்த அமைப்பின் 77 ஆண்டுக்கால வரலாற்றில், முதன்முறையாகத் தங்கப் பதக்கம் பெற்ற எலி மகாவாதான். மகாவா பணி ஓய்வு பெறுவதை நினைத்து வருத்தம்கொள்ளும் அதேவேளையில், பெருமிதம் அடைவதாகவும் தெரிவிக்கிறார்கள் கம்போடிய ராணுவ வீரர்கள். #எலிக்கு சல்யூட்!

நியூஸ் எம்பஸி

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் அதிபராக இருக்கிறார் முகமது புஹாரி. இவரது அரசுக்கு எதிராக, கடந்த சில மாதங்களாக மக்கள் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. இந்தநிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில், ``இன்று அரசுக்கு எதிராகப் போராடும் இளைஞர்களுக்கு, நைஜீரிய உள்நாட்டுப் போரில் ஏற்பட்ட சேதம், உயிரிழப்புகள் பற்றித் தெரிந்திருக்காது. எனவே, அவர்கள் மொழியிலேயே அவர்களுக்குப் புரியவைப்போம்’’ என்று பதிவிட்டிருந்தார். நைஜீரியாவில் 1967-70 காலகட்டத்தில் நடந்த உள்நாட்டுப் போரில் 30 லட்சம் பேர் வரை உயிரிழந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் போரை நினைவுகூர்ந்து அதிபர் புஹாரி பதிவிட்டிருக்கும் ட்வீட், வன்முறையைத் தூண்டுகிறது என்று கூறி அந்தப் பதிவை நீக்கியது ட்விட்டர் நிறுவனம். இதையடுத்து நைஜீரியாவில் ட்விட்டர் தளத்தையே முடக்கியிருக்கிறது அந்நாட்டு அரசு. ட்விட்டருக்கு இணையான இந்திய நிறுவனத்தின் `koo’ செயலி, நைஜீரியாவில் சேவை வழங்கத் தொடங்கியிருக்கும் நிலையில், `ட்விட்டர் தடை தற்காலிகமானதுதான்’ என்று அறிவித்திருக்கிறார் அதிபர் முகமது புஹாரி. #வார்த்தையிலும்கூட வன்முறை வேண்டாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism