Published:Updated:

நியூஸ் எம்பஸி

நியூஸ் எம்பஸி
பிரீமியம் ஸ்டோரி
நியூஸ் எம்பஸி

இனியாவது மோதல் நடக்காமல் இருக்கட்டும்!

நியூஸ் எம்பஸி

இனியாவது மோதல் நடக்காமல் இருக்கட்டும்!

Published:Updated:
நியூஸ் எம்பஸி
பிரீமியம் ஸ்டோரி
நியூஸ் எம்பஸி

சீன - அமெரிக்க யுத்தம், மறைமுகமாகவும் நேரடியாகவும் பல விஷயங்களில் தொடர்கிறது. பல்வேறு விவகாரங்களில் சீனாவுக்கு செக் வைக்கும் பணிகளைத் தொடர்ந்து செய்துவரும் ட்ரம்ப் அரசு, தற்போது சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு அமெரிக்காவுக்கு வர புதிய விசா கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. அதன்படி இனி, அந்தக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களோ, அவர்களின் உறவினர்களோ அமெரிக்காவுக்கு விசா பெற்ற ஒரு மாதத்துக்குள் சென்றிருக்க வேண்டும். அப்படிச் சென்றாலும் அமெரிக்க அதிகாரிகள் அனுமதித்தால் மட்டுமே உள்ளே செல்ல முடியும். அவர் எத்தனை நாள்கள் வரை அமெரிக்காவில் இருக்கலாம் என்பதையும் அந்த அதிகாரிகள்தான் முடிவுசெய்வார்களாம். இதற்கு முன்னர், மற்ற சீன குடிமக்கள்போலவே இவர்களும் ஒரு முறை விசா பெற்றுவிட்டால் அதை 10 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம்! #இதுக்கு இங்கே வரக் கூடாதுன்னே சொல்லிடலாமே!

`நமீபியா நாட்டில் 170 காட்டு யானைகள் விற்பனைக்கு...’ - இந்த விளம்பர வாசகத்தைப் பார்த்து யாரோ டுபாக்கூர் ஆசாமிகளின் வேலை என்று நினைத்துவிடாதீர்கள். அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்ட இந்த விளம்பரம் உண்மையானதுதான். அங்கு நிலவும் வறட்சி மற்றும் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், ஏலத்தின் மூலம் யானைகளை விற்க முடிவெடுத்திருக்கிறது நமீபிய அரசு. 1995-ம் ஆண்டில் 7,500 ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை, 2019-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 24,000 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக யானை-மனித எதிர்கொள்ளல்களும், யானையின் பாகங்களைக் கடத்தல்களுக்காகக் கொல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. ஏலத்தில் யானையை வாங்குபவர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் உண்டு. யானையை வளர்ப்பதற்கான இடம், வசதி வாய்ப்புகள் இருக்க வேண்டும். வெளிநாட்டவரும் ஏலத்தில் பங்கேற்கலாம், அந்நாட்டு அரசு ஒப்புதல் இருந்தால்! #யானை வாங்கலியோ யானை..!

நியூஸ் எம்பஸி

அஜர்பைஜான் (Azerbaijan), ஆர்மீனியா (Armenia) நாடுகளுக்கிடையே நாகர்னோ-காராபாக் பகுதி தொடர்புடைய மோதல் முடிவுக்கு வந்தாலும், இந்த மோதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகாமல் இருந்தன. இந்தநிலையில், இந்த மோதல் காரணமாகத் தங்கள் படையைச் சேர்ந்த 2,783 வீரர்கள் கொல்லப்பட்டதாக அஜர்பைஜான் தெரிவித்திருக்கிறது. நூற்றுக்கணக்கான வீரர்களைக் காணவில்லை எனவும் தெரிவித்திருக்கிறது. ஆர்மீனியா ராணுவ தரப்பிலும் 2,300-க்கும் அதிகமான வீரர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் முன்னர் குறிப்பிட்டிருந்தார். நவம்பர் 9-ம் தேதி ரஷ்ய அதிபர் முன்னிலையில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது! #இனியாவது மோதல் நடக்காமல் இருக்கட்டும்!

நியூஸ் எம்பஸி

ரஷ்யத் தொழிலதிபரான விக்டர் மார்ட்டிநோவ், தன் காதலியுடன் விடுமுறை நாளைச் செலவிட அலுஷ்டா நகரத்துக்குச் சென்றிருக்கிறார். அங்கு உள்ளூர் உணவு வகைகளை விரும்பாத இந்த ஜோடி, தங்களுக்கு மிக அருகிலிருக்கும் பிரபல மெக்டொனால்டு கடையைத் தேடியிருக்கிறது. அவர்களுக்கு அருகிலிருந்த மெக்டொனால்டு கடையின் தூரம் 450 மைல்கள் (720 கிலோமீட்டர்). உடனடியாக தனியார் ஹெலிகாப்டரை புக்செய்த விக்டர் மார்ட்டிநோவ், தன் காதலியுடன் பறந்து சென்று 450 மைல்களுக்கு அப்பாலிருந்த மெக்டொனால்டு கடையில் பர்கர், ஃப்ரைஸ், மில்க்‌ஷேக் ஆகியவற்றைச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் புறப்பட்ட இடத்துக்கு ஹெலிகாப்டரிலேயே திரும்பியிருக்கிறார். மெக்டொனால்டு கடையில் ஆன செலவு 4,900 ரூபாய். தனியார் ஹெலிகாப்டருக்கு ஆன செலவு, கிட்டத்தட்ட 2 லட்சம் ரூபாய்! #தொழிலதிபருக்கு இதெல்லாம் சாதாரணமப்பா!

நியூஸ் எம்பஸி

பிரான்ஸ் நாட்டைத் தலைமையிட மாகக்கொண்டு செயல்படும் இன்டர்போல், தனது 194 உறுப்பு நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கையை அனுப்பியிருக்கிறது. அதன்படி, கொரோனா தடுப்பு மருந்துகளைக் குறிவைத்து, ஒருங்கிணைக்கப்பட்ட க்ரைம் நெட்வொர்க் ஒன்று செயல்படுவ தாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆன்லைன் மூலமாகவோ, நேரடி யாகவோ போலியான மருந்துகளை மார்க்கெட்டுகளுக்குக் கொண்டு செல்ல இந்த நெட்வொர்க் வேலை செய்வதாக எச்சரிக்கை அளிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் பொதுமக்களுக்கு சில உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தவோ, உயிரைப் பறிக்கவோ முடியும் என்பதால், உலக நாடுகள் மிகுந்த கவனத்துடன் இதைக் கையாள வேண்டும் என இன்டர்போல் எச்சரித் திருக்கிறது! #கொரோனா க்ரைம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism