Published:Updated:

நியூஸ் எம்பஸி

நியூஸ் எம்பஸி
பிரீமியம் ஸ்டோரி
நியூஸ் எம்பஸி

கொலை செய்து அதற்கான தண்டனை பெற வேண்டும் என்பது என் விருப்பம்

நியூஸ் எம்பஸி

கொலை செய்து அதற்கான தண்டனை பெற வேண்டும் என்பது என் விருப்பம்

Published:Updated:
நியூஸ் எம்பஸி
பிரீமியம் ஸ்டோரி
நியூஸ் எம்பஸி
நியூஸ் எம்பஸி

அக்டோபர் 31-ம் தேதி, ஜப்பானின் டோக்கியோ நகரில், `பேட்மேன்’ படத்தின் வில்லன் போன்று ஜோக்கர் கெட்டப் போட்ட இளைஞர் ஒருவர் ரயிலில் ஏறியிருக்கிறார். ஜப்பானில் ஹாலோவீன் கொண்டாடப்படுவதால், இதைப் பயணிகள் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ரயில் கிளம்பிய சில நிமிடங்களில் கையில் கத்தியை எடுத்த அந்த இளைஞர், அங்கிருந்த பயணிகளைச் சரமாரியாகத் தாக்கியிருக்கிறார். இதில் 17 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர். தொடர்ந்து, ரயிலின் ஒரு பெட்டிக்குத் தீ வைத்திருக்கிறார் அந்த இளைஞர். இந்தச் சம்பவத்தால் ரயில் நிறுத்தப்பட்டதும், பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக ரயிலிலிருந்து கீழே குதித்து ஓடினர். தாக்குதலில் ஈடுபட்ட அந்த இளைஞர், கால் மேல் கால் போட்டுக்கொண்டு சிகரெட் பிடித்தபடி போலீஸ் வரும்வரை ரயிலிலேயே காத்திருந்தார். “பேட்மேன் வில்லனை ரொம்பப் பிடிக்கும். கொலை செய்து அதற்கான தண்டனை பெற வேண்டும் என்பது என் விருப்பம்” என்று போலீஸாரிடம் சொன்ன இந்த இளைஞனுக்கு வயது வெறும் 24!

நியூஸ் எம்பஸி

தாலிபன்களின் முந்தைய ஆட்சியில் ஷரியத் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த ஹிபத்துல்லா, தற்போதைய தாலிபன் ஆட்சியின் உச்சபட்சத் தலைவராகச் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து ஹிபத்துல்லா வெளியில் தலைகாட்டவே இல்லை. இது பற்றி பல்வேறு யூகங்கள் பேசப்பட்டுவந்த நிலையில், `கடந்த அக்டோபர் 31 அன்று ஹிபத்துல்லா முதன்முறையாக வெளியுலகுக்குத் தலைகாட்டினார்’ என்று செய்தி வெளியிட்டிருக்கிறது அரேபிய ஊடகமான `அல் மாயாதீன்.’ தாருல் உலூம் ஹக்கிமா மதரஸாவில் கூடியிருந்த தாலிபன் வீரர்களிடம் ஹிபத்துல்லா பேசியதாகவும் செய்திகள் அடிபடுகின்றன. ஹிபத்துல்லா அரசியல் குறித்துப் பேசவில்லை என்றும், மதம் சார்ந்து பேசியதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இது தொடர்பான வீடியோவோ, புகைப்படமோ வெளியிடப்படவில்லை என்றாலும், ஹிபத்துல்லா பேசிய 10 நிமிட ஆடியோ ஒன்றைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறது தாலிபன் அமைப்பு.

நியூஸ் எம்பஸி

இங்கிலாந்தின் குளோசெஸ்டர் நகரைச் சேர்ந்தவர் மெக்கானிக் பிரையன் வெப். இவர், 1946-ம் ஆண்டில் தனது 25-வது வயதில் வாக்ஸ்ஹால் என்ற கார் தயாரிக்கும் நிறுவனத்தில், `வேலை ஏதாவது கிடைக்குமா?’ என்று கதவைத் தட்டியிருக்கிறார். பிரையன் தொழிலுக்குப் புதுசு என்பதால், பயிற்சிப் பணியாளர் வேலைக்கு எடுத்துக்கொண்டது அந்த நிறுவனம். படிப்படியாகப் பல்வேறு பதவி உயர்வுகளைப் பெற்று ஓய்வுபெறும் வருடம் தாண்டியும், இரண்டிரண்டு வருடங்களாக நீட்டிப்பு செய்யப்பட்டு, தன் 90-வது வயதில் வாரன்டி அட்மினிஸ்ட்ரேட்டராக பணி ஓய்வுபெற்றிருக்கிறார் பிரையன். ``உழைப்பு என்னை இளமையோடு வைத்துக்கொண்டது. கார்கள் மாறின; காலம் மாறின. ஆனால், தொடர்ந்து பணியாற்றினேன். இப்போது ஓய்வெடுத்துக்கொள்ளப் போகிறேன். வேலையை மிஸ் செய்தாலும், இனிவரும் நாள்களில் மதிய நேரத்தில் ஒரு குட்டித்தூக்கம் போடலாம்!’’ என்றிருக்கிறார். பிரையனுக்கு `வாழ்நாள் ஊழியர் விருது’ கொடுத்த வாக்ஸ்ஹால், ஸ்பேனர் ஒன்றை நினைவுப்பரிசாக வழங்கியிருக்கிறது.