Published:Updated:

நியூஸ் எம்பஸி

உக்ரைன் திருமணம்
பிரீமியம் ஸ்டோரி
உக்ரைன் திருமணம்

- கிருஷ்ணா

நியூஸ் எம்பஸி

- கிருஷ்ணா

Published:Updated:
உக்ரைன் திருமணம்
பிரீமியம் ஸ்டோரி
உக்ரைன் திருமணம்
நியூஸ் எம்பஸி

இங்கிலாந்தைச் சேர்ந்த Sylvie Ludlow என்ற 73 வயதான பெண்மணிக்கு 75 பவுண்டு அபராதம் விதித்து Dartford நகர நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அந்த நகரத்திலுள்ள ‘செயின்ட் சேவியர்’ஸ் வாக்’கில் சுற்றித் திரியும் வாத்துகளுக்குத் தீனி கொடுத்தபோது அவை சிதறியதால், பொது இடம் அசுத்தமானதாக அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பெண்மணி தினமும் நடைப்பயிற்சியின்போது வாத்துகளுக்குத் தீனி போடுவதை வழக்கமாகக்கொண்டிருந்தார் என்று அவரின் நண்பர் சமூக ஊடகங்களில் பதிவுசெய்துள்ளார். இதையடுத்து, “இதற்கு அபராதமா?” என்று நெட்டிசன்கள் கொதித்து எழவே, அபராதத்தை விலக்கிக்கொண்டிருக்கிறது நகர நிர்வாகம்!

நியூஸ் எம்பஸி

இரண்டு கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரத்தில் அமைதிக்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. இந்த நிலையில்தான், மார்ச் 7 அன்று போர்வீரர்கள் புடைசூழப் போர்க்களத்தில் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள் உக்ரைனைச் சேர்ந்த Lesia Ivashchenko, Valerii Fylymonov இருவரும். “22 வருடங்களாக லிவிங் டுகெதராக இருக்கிறோம். போர் ஆரம்பித்ததுமே இவர் போர்க்களத்துக்கு வந்துவிட்டார். நீண்ட நாள்களுக்குப் பிறகு நாங்கள் சந்தித்ததும் திருமணம் செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்துவிட்டோம். எங்கள் 18 வயது மகள் பல வருடங்களாக இந்த தினத்துக்குத்தான் காத்திருந்தாள். நாளை என்ன ஆகுமென்று எங்களுக்குத் தெரியாது. இன்று, இந்த வீரர்கள் முன்பு திருமணம் செய்துகொள்வது எங்களுக்கு ரொம்பவுமே ஸ்பெஷல்!” என்றிருக்கிறார் Lesia. கிவ் நகர மேயர் Vitaly Klitschko இவர்களை நேரில் வாழ்த்தியிருக்கிறார்.

நியூஸ் எம்பஸி

இஸ்ரேலில் 4 வயது குழந்தை ஒன்றுக்கு ‘போலியோ பாசிட்டிவ்’ கண்டறியப்பட்டுள்ளதால், அந்த நாட்டின் சுகாதாரத்துறை கடும் அதிர்ச்சியடைந் திருக்கிறது. 1989-க்குப் பிறகு இஸ்ரேலில் போலியோ கண்டறியப்படுவது இதுதான் முதன்முறை என்று பதறுகின்றன அந்த நாட்டின் செய்தி நிறுவனங்கள். ஜெருசலம் நகரைச் சேர்ந்த அந்தக் குழந்தை, சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரைத்த தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்ளாததே இதற்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் வேறு யாரும் இருக்கிறார்களா என்று தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது இஸ்ரேலின் சுகாதாரத்துறை.