Published:Updated:

நியூஸ் எம்பஸி

நியூஸ் எம்பஸி
பிரீமியம் ஸ்டோரி
நியூஸ் எம்பஸி

தென்னமெரிக்க நாடான கொலம்பியாவில், முதன்முறையாக இடதுசாரிகள் ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.

நியூஸ் எம்பஸி

தென்னமெரிக்க நாடான கொலம்பியாவில், முதன்முறையாக இடதுசாரிகள் ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.

Published:Updated:
நியூஸ் எம்பஸி
பிரீமியம் ஸ்டோரி
நியூஸ் எம்பஸி

“குறிவைத்துத் தாக்கியிருக்கிறோம்!”

கடந்த வாரம், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள சீக்கிய வழிபாட்டுத் தலமான குருத்வாராவில் பயங்கரவாதிகள் சிலர் வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் குருத்வாராவிலிருந்த இரண்டு பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தாலிபன் அரசின் காவல்துறையினர், பயங்கரவாதிகள்மீது பதில் தாக்குதல் நடத்தி அங்கிருந்த மக்களை மீட்டனர். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் இந்தச் சம்பவத்துக்கு எதிராகக் கடும் கண்டனங்களைப் பதிவுசெய்திருக்கின்றனர். இந்த நிலையில், இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. `நபிகள் நாயகம் குறித்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்துக்கள், சீக்கியர்களைக் குறிவைத்துத் தாக்கியிருக்கிறோம்’ என்று ஐ.எஸ்.ஐ.எஸ் தரப்பிலிருந்து விளக்கம் கொடுக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன!

நியூஸ் எம்பஸி

போர், ஆண்டுக் கணக்கில் நீடிக்கலாம்!

ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கிடையேயான போர், நான்கு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. உக்ரைனின் சில முக்கிய நகரங்களை ரஷ்யா தனது கட்டுக்குள் கொண்டுவந்திருந்தாலும், தலைநகர் கீவ்-வைக் கைப்பற்ற முடியாமல் திணறிவருகிறது. இந்த நிலையில், உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கிவரும் நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் ஜென்ஸ், ``இந்தப் போர் ஆண்டுக்கணக்கில் நீடிக்க வாய்ப்பிருக்கிறது. உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் மட்டுமல்லாமல் உணவு, எரிபொருள் உதவிகளையும் நாம் தொடர்ந்து வழங்க வேண்டும். அதிக செலவுகள் ஏற்பட்டாலும், உக்ரைனை நாம் பலவீனமடைய விடக் கூடாது. ஒருவேளை, புதின் நினைத்தது நிறைவேறிவிட்டால், நாம் இதைவிட அதிக விலையைக் கொடுக்கவேண்டிய சூழல் ஏற்படும்’’ என்று எச்சரித்திருக்கிறார். ஜென்ஸின் இந்தக் கருத்து பல விவாதங்களுக்கு வழி வகுத்திருக்கிறது.

நியூஸ் எம்பஸி

முதல் இடதுசாரி அதிபர்!

தென்னமெரிக்க நாடான கொலம்பியாவில், முதன்முறையாக இடதுசாரிகள் ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கிறார்கள். கடந்த சில மாதங்களாகவே சமத்துவமின்மை, பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவை காரணமாக அரசுக்கு எதிராக கொலம்பியா மக்கள் போராடிவந்தனர். இந்த நிலையில், சமீபத்தில் நடந்த தேர்தலில், இடதுசாரித் தலைவரான குஸ்தாவோ பெட்ரோ அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கொலம்பியாவின் முதல் கறுப்பினப் பெண் துணை அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கிறார் பிரான்ஸியா. குஸ்தாவோ, அந்த நாட்டிலிருந்த கிளர்ச்சிக் குழுக்களில் செயல்பட்டு, அதற்காகச் சிறை சென்று, பின்னர் பொது மன்னிப்பு பெற்று வெளியேறியவர். ``புதிய அரசாங்கத்தில் அரசியல் துன்புறுத்தல்களோ, சட்டரீதியான துன்புறுத்தல்களோ இருக்காது. மரியாதையும் உரையாடல்களும் மட்டுமே இருக்கும். பழங்குடிகள், பெண்கள், ஆயுதமேந்திய போராளிகள், விவசாயிகள், இளைஞர்களின் கருத்துகளைக் கேட்டுச் செயல்படத் தயாராக இருக்கிறேன்’’ என்று குஸ்தாவோ கூறியிருப்பதற்கு, அந்நாட்டு மக்கள் பெரும் வரவேற்பளித்திருக்கிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism