அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

நியூஸ் எம்பஸி

vikatan
பிரீமியம் ஸ்டோரி
News
vikatan

நீண்டுகொண்டே போகும் ரஷ்யா - உக்ரைன் போரில், திடீர் ட்விஸ்ட்டாக திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகி யிருக்கிறது.

ஜி ஜின்பிங்
ஜி ஜின்பிங்

சாகும் வரை அதிபர்... பேனர் போராட்டம்!

சீனாவில் 10 ஆண்டுகள் மட்டுமே ஒருவர் அதிபராக இருக்க முடியும் என்ற சட்டத்தை, கடந்த 2018-ம் ஆண்டு நீக்கினார் சீன அதிபர் ஜி ஜின்பிங். அக்டோபர் 22-ம் தேதியோடு அதிபரின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது தேசிய மாநாடு கூடியிருக் கிறது. இந்த மாநாட்டில் மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங், கட்சியின் பொதுச்செயலாளராகவும், சீனாவின் அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 23-ம் தேதி இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.

மேலும், `சாகும்வரை தானே அதிபராக இருக்க வேண்டும்’ என்ற திட்டத்தில் இருக்கும் ஜி ஜின்பிங்குக்கு எதிராக, சீனாவில் பேனர் வைப்பு போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. தலைநகர் பீஜிங்கில் வைக்கப் பட்டிருக்கும் ஒரு பேனரில், `பெரும் தலைவருக்கு `நோ’ சொல்லுங்கள்; வாக்குரிமைக்கு `யெஸ்’ சொல்லுங்கள். அடிமையாக இருக்காதீர்கள்; குடிமகனாக இருங்கள்’ ஆகிய வாக்கியங்கள் இடம்பெற்றிருக்கின்றன. மற்றொரு பேனரில், `வேலை நிறுத்தத்தில் ஈடுபடுங்கள். சர்வாதிகாரியும் தேசத்துரோகியுமான ஜின்பிங்கை நீக்குங்கள்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

நியூஸ் எம்பஸி

தீர்ந்துபோன ரஷ்ய ஆயுதங்கள்?

நீண்டுகொண்டே போகும் ரஷ்யா - உக்ரைன் போரில், திடீர் ட்விஸ்ட்டாக திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகி யிருக்கிறது. ரஷ்யாவுக்கு ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த உளவு அமைப்புகள் சந்தேகம் கிளப்பியிருக்கின்றன. உக்ரைனின் முக்கிய நகரங்கள்மீது ரஷ்யா, தொடர் குண்டுமழை பொழிந்துவரும் நிலையில், இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்து பிரிட்டனின் ஜி.சி.ஹெச்.க்யூ உளவு அமைப்பின் தலைவர் சர் ஜெரேமி ஃப்ளெமிங், ``அவர்களிடம் ஆயுதங்கள் தீர்ந்துவிட்டன என்பது களத்திலிருக்கும் ரஷ்யாவின் தளபதிகளுக்குத் தெரியும்; எங்களுக்கும் தெரியும்’’ என்று கூறி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார். இது தொடர்பாக ரஷ்யத் தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

நியூஸ் எம்பஸி

தீவிரமாகப் பரவும் எபோலா!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில், முதல் எபோலா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அந்தச் சமயத்தில், `கொரோனாபோல எபோலாவுக்கு ஊரடங்கு தேவைப்படாது’ என்றது அந்த நாட்டு அரசு. தற்போது, உகாண்டாவில் எபோலா தொற்று தீவிரமடைந்திருக்கும் நிலையில், முபெண்டே, கசண்டா ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுவரை எபோலா தொற்று காரணமாக 19 பேர் உயிரிழந்திருப்பதாக அந்த நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது. ஏற்கெனவே, 2013-17 காலகட்டத்தில் எபோலோ நோய்த்தொற்று மொத்த ஆப்பிரிக்க நாடுகளையும் மிரட்டியது. இதில், சுமார் 11,000 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு போடப்பட்ட தடுப்பூசியின் பலனாக இந்த நோய் கட்டுக்குள் வந்தது. தற்போது மீண்டும் எபோலா தீவிரமடைந்திருப்பது, ஆப்பிரிக்க நாடுகளில் பெரும் கலக்கத்தை உண்டாக்கியிருக்கிறது.