Published:Updated:

உலகக் கோப்பை: அமெரிக்காவிடம் வீழ்ந்த இரான்; தோல்வியைக் கொண்டாடித் தீர்த்த இரானியர்கள் - காரணம் என்ன?

இரான்
News
இரான்

கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தில் அமெரிக்காவிடம் இரான் தோல்வியுற்றதை, ஹிஜாபுக்கு எதிரான இரானிய போராட்டக்காரர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர்.

உலகக் கோப்பை: அமெரிக்காவிடம் வீழ்ந்த இரான்; தோல்வியைக் கொண்டாடித் தீர்த்த இரானியர்கள் - காரணம் என்ன?

கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தில் அமெரிக்காவிடம் இரான் தோல்வியுற்றதை, ஹிஜாபுக்கு எதிரான இரானிய போராட்டக்காரர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர்.

Published:Updated:
இரான்
News
இரான்

இரானில் அரசுக்கெதிரான பொதுமக்களின் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமாக இருக்கின்றன. காரணம், இஸ்லாமியப் பெண்களின் ஆடை சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் அரசு கொண்டுவந்த புதிய கட்டுப்பாடுகள்தான். அதிலும் மிக முக்கியமாக, ஹிஜாப் சரியாக அணியாத காரணத்தால் மஹ்சா அமினி என்ற பெண் கைதுசெய்யப்பட்டு, பின்னர் போலீஸ் கட்டுப்பாட்டிலிருந்தபோதே அவர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் கோபத்தைத் தூண்டியது.

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் - இரான்
ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் - இரான்

மஹ்சா அமினியின் மரணத்துக்கு நியாயம் வேண்டி அரசுக்கெதிராக நடத்தப்பட்டுவரும் இந்தப் போராட்டத்தில், மக்கள்மீது தொடர்ச்சியாக துப்பாக்கிச்சூடு நடத்திவருகின்றன அரசுப் படைகள். இதில் குழந்தைகள் உட்பட சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதுவரை உயிரிழந்திருக்கின்றனர். இதன் காரணமாக உச்சகட்ட கோபத்தில் இருக்கும் போராட்டக்காரர்கள், கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தில் தங்களின் சொந்த நாடு இரான் பங்கேற்றதைக் கடுமையாக எதிர்த்துவருகின்றனர்.

இரான்
இரான்

இரானின் தோல்வி குறித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இரானிய விளையாட்டுப் பத்திரிகையாளர் சயீத் ஜஃபரானி (Saeed Zafarany), ``அமெரிக்கா கோல் அடித்ததை நான் மூன்று மீட்டர் உயரத்துக்கு எகிறி குதித்துக் கொண்டாடுவேன் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்" என ட்வீட் செய்திருக்கிறார். மேலும் இன்னொரு நபர், ``அவர்கள் மக்களிடமும், எதிராளியிடமும், அரசாங்கத்திடமும்கூட தோற்றார்கள்" எனக் கூறியிருக்கிறார்.