Published:Updated:

250 கிலோ எடை; ஐ.எஸ் அமைப்பின் `ஜம்போ'! சரக்கு லாரியில் கொண்டுசெல்லப்பட்ட தீவிரவாதி

லாரியில் கொண்டு செல்லப்பட்ட தீவிரவாதி
லாரியில் கொண்டு செல்லப்பட்ட தீவிரவாதி

ஐ.எஸ் தீவிரவாதி தலைவர்களில் ஒருவரான அபு அப்துல் பாரி பிடிபட்டுள்ளார்.

சுமார் 250 கிலோ எடை கொண்ட ஐ.எஸ் தீவிரவாதியைக் கைது செய்து சரக்கு லாரியில் இராக் ராணுவத்தினர் ஏற்றிச் சென்றனர். இராக் நாட்டில் மொசூல் நகரில், மையம் கொண்டிருந்த ஐ.எஸ் அமைப்பினரை இராக் ராணுவம் தோற்கடித்தது. எனினும், பல இடங்களில் மோதல்கள் நடந்து வருகின்றன. இராக் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான டைகரீஸ் நதிக்கரையில் அமைந்துள்ள மொசூல் கிட்டத்தட்ட சுடுகாடாகிவிட்டது.

மொசூல் நகரம்
மொசூல் நகரம்

இந்த நகரம் பழைய நிலைக்குத் திரும்ப இன்னும் 10 ஆண்டுகளாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்கள், பொதுமக்களுக்கும் தங்களுக்கு எதிரானவர்களுக்கும் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர். இந்தநிலையில், ஐ.எஸ் அமைப்பின் முக்கியத் தலைவராகச் செயல்பட்டு வந்த அபு அப்துல் பாரி என்பவர் ஐ.எஸ் அமைப்புக்கு ஆதராவாகச் செயல்படாத மதகுருக்களுக்கு எதிராக 'பத்வா' பிறப்பித்தார்.

மருத்துவர் டு தீவிரவாதி... டாக்டர் பாம் தப்பியதும் மீண்டும் பிடிபட்டதும் எப்படி?

இதையடுத்து, இராக் ராணுவத்தின் ஸ்வாட் பிரிவு படையினர் மறைந்திருந்த அப்துல் பாரியைத் தீவிரமாகத் தேடிக் கைது செய்தனர். அப்துல் பாரியால் எழுந்து நடமாட முடியாது. சுமார் 250 கிலோ எடை கொண்டவர். இவரை போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்ல முடியவில்லை. இதனால், சரக்கு லாரி ஒன்று கொண்டு வந்து அதில் ஏற்றிச் சென்றனர். சரக்கு லாரியின் இரு பக்கத்திலும் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்கு நின்றனர்.

டைகரீஸ் நதி ஓடும் அழகிய மொசூல் நகரம்
டைகரீஸ் நதி ஓடும் அழகிய மொசூல் நகரம்

இவரை, இராக்கில் `ஜம்போ' தீவிரவாதி என்று அழைக்கின்றனர். மொசூல் நகரில் உள்ள கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மத குருக்களின் கல்லறைகளை இடிக்க ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு உத்தரவிட்ட குற்றச்சாட்டு இவர் மீது உண்டு. பெண்கள், சிறுவர்களை கொலை செய்த குற்றச்சாட்டும் இருக்கிறது. தீவிரவாதி அப்துல் பாரி பிடிபட்டுள்ளது ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் முக்கியமானது என்று சொல்லப்படுகிறது.

பின் செல்ல