Published:Updated:

6.1 அடி உயரம்; விவசாயி; சுற்றுலா சென்ற கணவனை ஏலத்தில் விற்க முயன்ற மனைவி!

லிண்டா கொடுத்த விளம்பரத்தின் படம்

தன்னையும் தன் குழந்தைகளையும் தனியாகத் தவிக்கவிட்டு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற தன் கணவனை ஏலத்தில் விற்றுவிட வேண்டும் என்று இணையதளத்தில் விளம்பரம் கொடுத்துள்ளார் அவரின் மனைவி.

6.1 அடி உயரம்; விவசாயி; சுற்றுலா சென்ற கணவனை ஏலத்தில் விற்க முயன்ற மனைவி!

தன்னையும் தன் குழந்தைகளையும் தனியாகத் தவிக்கவிட்டு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற தன் கணவனை ஏலத்தில் விற்றுவிட வேண்டும் என்று இணையதளத்தில் விளம்பரம் கொடுத்துள்ளார் அவரின் மனைவி.

Published:Updated:
லிண்டா கொடுத்த விளம்பரத்தின் படம்

நியூசிலாந்தைச் சேர்ந்த லிண்டா மெக்அலிஸ்டரின் கணவர் ஜான் மெக்அலிஸ்டர். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். லிண்டாவின் கணவரான ஜான், தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுலா சென்றிருக்கிறார். அவர் திரும்பி வருவதற்குள் அவரது மனைவி அவரை ஏலத்தில் விற்பதற்கு இணையதளத்தில் விளம்பரம் கொடுத்துள்ளார்.

லிண்டா பகிர்ந்த ஒரு புகைப்படம்
லிண்டா பகிர்ந்த ஒரு புகைப்படம்

அவர் கொடுத்த விளம்பரத்தில் “ஜான் மெக்அலிஸ்டர், உயரம் 6'1, வயது 37 மற்றும் விவசாயி என விவரித்து அவரது புகைப்படம் ஒன்றையும் பதிவுசெய்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதில் வேடிக்கை என்னவென்றால் இவரது இந்த விளம்பரத்தைப் பார்த்து சில பெண்கள் இவரை வாங்குவதற்குப் பேரமும் பேசியுள்ளனர்.

இதுகுறித்துக் கூறும் லிண்டா, இது கணவரின் வழக்கமான செயல் என்றும் மீன் பிடித்தல், வேட்டையாடுதல் போன்ற விசயங்களுக்காக அவர் நண்பர்களுடன் வெளியில் செல்வார் ஆனால் தற்போது குழந்தைகளுக்கு விடுமுறை என்பதால் அவர் நேரத்தைக் குழந்தைகளுடன் செலவிடாமல் நண்பர்களுடன் சென்றது எனக்குச் சற்று கோபமாக இருந்தது அதனால் இப்படிச் செய்தேன் என்றார் லிண்டா. இப்படி விளையாட்டாகச் செய்த விசயம் வைரலாகும் என்று நினைக்கவில்லை என்று அவர் தெரிவித்திருந்தார். இது தொடர்பான புகைப்படங்களையும் மெசஜ்களையும் லிண்டா தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது இது நெட்டிஷன்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism