Published:Updated:

ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி சுட்டுக்கொலை?

இது தொடர்பான விரிவான அறிக்கை ஒன்று அமெரிக்க அதிபர் மாளிகையிலிருந்து வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அபுபக்கர் அல் பக்தாதி
அபுபக்கர் அல் பக்தாதி

ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி சிரியாவில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக டி.என்.ஏ சோதனைக்கு நடைபெற்று உறுதிப்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பான விரிவான அறிக்கை ஒன்று அமெரிக்க அதிபர் மாளிகையிலிருந்து வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டொனால்ட் ட்ரம்ப்
டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ பக்தாதி இருந்த இடத்தை கண்டறிய உதவியதாக அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்க ராணுவ தாக்குதலின்போது, பக்தாதி தான் அணிந்திருந்த தற்கொலை உடையை வெடிக்கச்செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் நடந்த விமானத்தாக்குதலில் பக்தாதி காயமடைந்ததாகவும், இதன்காரணமாக தீவிரவாத இயக்கத்தை வழிநடத்தும் பொறுப்பை 5 மாதங்கள்வரை அவர் கைவிட்டதாகவும், அப்போது அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டது. இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் ஈராக் என்ற ஐஎஸ்ஐ தீவிரவாத இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் தலைவராக இருந்தவர் பக்தாதி.

அபுபக்கர் அல் பக்தாதி
அபுபக்கர் அல் பக்தாதி

பின்பு, 2013-ம் ஆண்டு சிரியாவைச்சேர்ந்த அல்கொய்தா என்ற தீவிரவாத அமைப்பை இணைத்துக்கொண்டார். பின்பு, தன்னுடைய இயக்கத்தின் பெயரை ஐ.எஸ்.ஐ.எஸ் என மாற்றிக்கொண்டார். கடந்த 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் தீவிரவாதி பக்தாதி. இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ``மிகபெரிய நிகழ்வு ஒன்று நடந்துள்ளது'' என்று பதிவிட்டிருந்தார்.