Published:Updated:

`விசா இல்லாமல் இந்தியர்கள் எங்க நாட்டுக்கு வரலாம்!- பிரேசில் அதிபரின் அறிவிப்புக்கு என்ன காரணம்?

ஜாய்ர் போல்சோனாரா

கடந்த மாதங்களில் பிரேசிலின் அமேசான் காடுகள் பற்றி எரிந்த காரணத்தால் பிரேசில் ஒரு பேசும் பொருளாகவே மாறியிருந்தது. தற்போது மற்றுமொரு காரணத்துக்காக கவனம் பெறுகிறது பிரேசில்.

`விசா இல்லாமல் இந்தியர்கள் எங்க நாட்டுக்கு வரலாம்!- பிரேசில் அதிபரின் அறிவிப்புக்கு என்ன காரணம்?

கடந்த மாதங்களில் பிரேசிலின் அமேசான் காடுகள் பற்றி எரிந்த காரணத்தால் பிரேசில் ஒரு பேசும் பொருளாகவே மாறியிருந்தது. தற்போது மற்றுமொரு காரணத்துக்காக கவனம் பெறுகிறது பிரேசில்.

Published:Updated:
ஜாய்ர் போல்சோனாரா

பிரேசில் அதிபர் ஜாய்ர் போல்சோனாரா கடந்த வியாழக்கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ``தங்கள் நாட்டுக்கு இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த தொழிலதிபர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இனி விசா தேவையில்லை'' என அறிவித்தார். அரசியலில் தீவிர வலது சாரி ஆதரவாளரான ஜாய்ர் போல்சோனாரா, பல முன்னேறிய நாடுகளுக்கு ஏற்கெனவே விசாவிலிருந்து சலுகை அளித்திருந்தார். தற்போது சீனாவுக்கு அதிகாரபூர்வமாக சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ள இவர், இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதன்மூலம் வளரும் நாடுகளுக்கும் விசாவிலிருந்து சலுகை அளித்துள்ளார் ஜாய்ர் போல்சோனாரா. இதற்கு முன்னர் பிரேசில் அரசு வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவின் தொழிலதிபர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் விசா இல்லாமலேயே பிரேசிலுக்கு வருவதற்கான அனுமதியை வழங்கியிருந்தது.

விசா
விசா

ஆனால், இந்த நாடுகளில் ஒன்றுகூட பிரேசில் மக்கள் தங்கள் நாடுகளுக்கு விசா இல்லாமல் நுழைவதற்கான அனுமதியை வழங்கவில்லை. பல்வேறு நாடுகளுக்கு விசா சலுகையை அளிப்பதன் மூலம் பிரேசில் அரசு தங்களது சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் ஆறு மில்லியன் வெளிநாட்டுப் பயணிகள் பிரேசிலுக்கு வந்துள்ளனர் என்பது கவனத்துக்குரிய ஒன்றாகும். இதன்மூலம் பிரேசிலுக்கு வரும் வெளிநாடு முதலீடுகளும் அதிகரிக்கும். இதனால் இதன் தொழில்துறை வளர்ச்சியடையும் என்பதில் எந்தவோர் ஐயமுமில்லை. இதனின் பொருளாதார வளர்ச்சியும் நல்ல அளவில் உயர்ந்துள்ளது. பிரேசிலின் உணவு உற்பத்தி குறைந்திருந்தாலும் அதனின் தொழில்துறையும் சர்வீஸ் துறையும் பொருளாதார வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களித்தது.